ஒவ்வொரு நிமிடத்திற்கும் 5 லட்சம் ரூபாய் என மருமகனிடம் டீல் போட்ட ஹன்சிகாவின் அம்மா.! அதிர்ச்சியடைந்த மாமியார்..

0
hansika
hansika

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானி குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் திரைப்படங்கள் நடிக்க தொடங்கி தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் தமிழில் விஜய், சூர்யா, கார்த்தி, சிம்பு, விஷால், தனுஷ் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கும் நிலையில் இவருடைய நடிப்பில் கடைசியாக மஹா திரைப்படம் வெளியாகி கலவை விமர்சனத்தை பெற்றது.

மஹா படம் இவருடைய 50வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் ஸ்ரீகாந்த், சிம்பு போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் வித்தியாசமான கதையம்சத்துடன் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் வெளிவந்து கலவை விமர்சனத்தை பெற்றது.

இப்படிப்பட்ட நிலையில் நடிகை ஹன்சிகா தனது நீண்ட நாள் நண்பர் மற்றும் தொழில் கூட்டாளியான சோஹைல் கதூரியா என்பவரை காதலித்து கடந்த வருடம் டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் இதற்காக பல கோடி செலவு செய்தார் ஹன்சிகா.

திருமணத்திற்குப் பிறகு பல நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்ட ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் லவ் ஷாதி ட்ராமா என்ற பெயரில் ஓடிடி தளத்தில் சினிமா வாழ்க்கை, காதல் திருமணம் போன்றவற்றை பேசி இருந்தார். இந்நிலையில் ஹன்சிகாவின் கணவர் சோஹைல் கந்தூரியாவின் குடும்பத்தினரிடம் ஒரு நிமிடத்திற்கு 5 லட்சம் கேட்பதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது நாசிகை ஹன்சிகாவின் தாயார் மோனா மோத்வானி ஹன்சிகா கணவர் சோஹைல் அம்மாவிடம் விழாக்களுக்கு தாமதாக வருவதை பார்த்து தாமதமாக வரும் ஒவ்வொரு நிமிடத்திற்கு சுமார் 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன் என பேட்டி ஒன்றில் மோனா மோத்வானி கூறியது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.