ஹன்சிகாவின் “மஹா திரைப்படம்”.! 3 நாள் முடிவில் அள்ளிய தொகை எவ்வளவு தெரியுமா.?

நடிகை ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் பருவ வயதை எட்டிய பிறகு சினிமா உலகில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். முதலில் தனுஷ் நடிப்பில் உருவான மாப்பிள்ளை படத்தில் நடித்து தமிழ் சினிமா உலகில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பின் தமிழில் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யனும் குமாரு, சேட்டை, சிங்கம் 2 என அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டார்.

மேலும் படங்களில் ரொமான்டிக், கிளாமர் அனைத்து விதமான சீன்களிலும் சிறப்பாக நடித்து அசத்தியதால் ரசிகர்களும் இவருக்கு வளர தொடங்கினர்.  இதனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக மாறினார். இப்படி ஓடிக்கொண்டு இருந்த ஹன்சிகா ஆள் பார்ப்பதற்கு சற்று குண்டாக இருந்ததால் ரசிகர்கள் இவரை குட்டி குஸ்பு என கூப்பிட ஆரம்பித்தனர்.

இதை உடைத்து எரிக்கும் வகையில் நடிகை ஹன்சிகா சினிமாவுக்கு சிறு லீவு விட்டு அதிரடியாக தனது உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம்மாக மாறி தற்போது மீண்டும் சினிமா உலகில் நடிக்க வந்துள்ளார். வந்த உடனே இவருக்கு வாய்ப்புகளும் கிடைக்கத் தொடங்கி உள்ளது அந்த வகையில் மஹா, ரவுடி பேபி என அடுத்தடுத்த படங்களில் நடித்து ஓடுகிறார்.

இந்த நிலையில் ஹன்ஷிகா நடித்த மஹா திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக தோல்வியை தழுவி கொண்டிருக்கிறது முதல் நாளில் வெறும் ஒரு கோடியை கூட தொட முடியாமல் போன மஹா திரைப்படம் அடுத்தடுத்த நாட்களில் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது .

ஆனால் மூன்று நாள் முடிவில் மட்டும் வெறும் இரண்டு கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதனால் ஹன்சிகா ரொம்ப வருத்தத்தில் இருக்கிறார் காரணம் மஹா திரைப்படம் ஹன்சிகாவுக்கு 50வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பட குழு மனசு தளராமல் வருகின்ற நாட்களில் நிச்சயம் போட்ட காசையாவது எடுத்து விடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறதாம்.

Leave a Comment