அமுல் பேபி போல் இருந்த ஹன்சிகா தற்பொழுது எப்படி இருக்காங்க பாத்தீங்களா.!

வெள்ளித்திரையில் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்பட்டு வந்த நடிகைகளில் ஒருவர்தான் ஹன்சிகா இவர் நிறைய திரைப்படங்களில் பார்ப்பதற்கு அமுல்பேபி போல் கொழுக் மொழுக்கென்று நடித்து மக்களை கவர்ந்து விட்டார் என்றுதான் கூற வேண்டும் மேலும் இவரது நடிப்பைப் பார்த்து இவருக்கு சின்ன குஷ்பு என்று செல்லமாக ரசிகர்கள் கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த வகையில் பார்த்தால் இவர் தமிழில் விஷால் உடன் இணைந்து ஆம்பள என்ற திரைப்படத்தில் நடித்த பொழுது இவரை பலரும் உச்ச நட்சத்திரமாக கொண்டாடி வந்தார்கள் அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் அரண்மனை திரைப்படத்திலும் நடித்து இருந்தார் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் சிம்புவுடன் இணைந்து மஹா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகர் சிம்புவுடன் இவர் மீண்டும் இணைந்து நடித்து உள்ளதால் பலரும் இவர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடிப்பாரா என பலவிதமான கேள்விகளை எழுப்பி வந்தார்கள் மார்க்கெட் இல்லாமல் இருக்கும் இவருக்கு படவாய்ப்புகளும் குறைந்து கொண்டே போகிறது.

அந்த வகையில் சரிந்த மார்க்கெட்டை பிடிப்பதற்காக கொழுக் மொழுக் என்று இருந்த ஹன்சிகா கடந்த சில மாதங்களாக கடுமையான உடற்பயிற்சி எடுத்து தற்பொழுது பார்ப்பதற்கே மிகவும் ஒல்லியாக மாறிவிட்டார் அந்த வகையில் இவர் ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படமும் ஒன்று கிடைத்துள்ளது.

hansika
hansika

ஆம் பார்ப்பதற்கு துளி கூட ஆள் அடையாளமே தெரியாமல் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு சின்ன குஷ்பூ வா இப்படி மாறி விட்டார். என்று கிண்டல் செய்து வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து ஹன்சிகாவை பார்த்தீர்களா என்று கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment