இருட்டில் இருக்கும் மின்மினி பூச்சி போல் ஜொலிக்கும் ஹன்சிகா.! வைரலாகும் புதிய போட்டோஷூட்

Hansika shines like a firefly in the dark : நடிகை ஹன்சிகா தன்னுடைய சுறுசுறுப்பான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர இவர் குழந்தை நட்சத்திரமாகவே நடிக்க ஆரம்பித்தார் முதன்முதலில், தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள ஹன்சிகா ஊரடங்கு காரணமாக எந்த ஒரு படப்பிடிப்பு நடைபெறாத நிலையில் பல நடிகைகள் விழிப்புணர்வு வீடியோவை வெளியிடுவது, ஜிம் ஒர்க்கவுட் வீடியோவை வெளியிடுவது, போட்டோ ஷூட் நடத்தி புகைப் படங்களை வெளியிடுவது என்பது வழக்கமாக வைத்துள்ளார்.

அந்தவகையில் ஹன்சிகா இந்த ஊரடங்கு காலத்தில் உடல் எடையை அதிரடியாக குறைத்து தன்னுடைய புசுபுசுன்னு இருந்த உடலை ஸ்லிம்மாக மாற்றியுள்ளார், தற்போது இவர் குயின் ஆகவே தோற்றமளிக்கிறார்.

இந்த நிலையில் சமீபகாலமாக ஹன்சிகாவிற்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படவாய்ப்புகள் அமையவில்லை அதனால் அடிக்கடி இணையதளத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும், பதிவிட்டு தங்களுடைய ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

ஹன்சிகா இதுவரை 49 திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் தன்னுடைய ஐம்பதாவது திரைப்படமாக மஹா என்ற திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார், இந்த நிலையில் தற்பொழுது இருட்டில் முகத்தில் மட்டும் வெளிச்சம் தெரியும்படி மின்மினி பூச்சி போல் காட்சியளிக்கும் புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோவில் அவரின் ஆடை கண்ணாடி போல் ஜொலிக்கும் வகையில் அமைந்துள்ளது, பார்ப்பதற்கு கடல்கன்னி போல் மின்னும் ஹன்சிகா ஒரு சிறிய மின் விளக்கு வெளிச்சத்தில் பளிச்சென தெரியும் தன்னுடைய தேகத்தை காட்டியவாறு ஒரு பார்வையை வீசி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

ihansika_tamil360newz
ihansika_tamil360newz
ihansika_tamil360newz1
ihansika_tamil360newz1
ihansika_tamil360newz11
ihansika_tamil360newz11

Leave a Comment