சிம்பு ஹன்சிகா காதலுக்கு மரணமாஸ் வில்லனாக பிரபல நடிகர்.! மஹா போஸ்டர் இதோ. ! இனிதான் அதிரடி இருக்கு

முன்னணி நடிகைகளில் கொடி கட்டிப் பறந்தவர் நடிகை ஹன்சிகா. நயன்தாராவுக்கு அடுத்தபடியாக இவர் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிலர் தோல்விப் படங்களை தொடர்ந்து கொடுத்ததால் அவரால் நிலைத்து நிற்க முடியாமல் போனது. இவர் கடைசியாக பிரபுதேவாவுடன் நடித்த குலேபகாவலி திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது.

இதையடுத்து அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு அப்புறம் இப்பொழுதுதான் அவர் மஹா என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜமீல் அவர்கள் இயக்கி வருகிறார். தற்போது முன்னணி நடிகர்களுடன் நடிப்பதை விட்டு விட்டு  கதைக்கு முக்கியத்துவம் இருக்கிற ககாபாத்திரத்திலேயே தற்போது நடிக்க ஆர்வம் உள்ளதாக கூறி வருகிறார்.

தற்போது ஹன்சிகா அவர்கள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அதில் ஹன்சிகா அவர்கள் காவி ஆடை அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதுமட்டுமில்லாமல் சிம்புவுடன்    ஹாயாக படுத்து கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

hansika
hansika

இருவருக்குமிடையே லவ் பிரேக்கப் ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது மஹா ஷூட்டிங்கிற்காக இருவரும் ஒன்றாக வந்திருந்தார்கள். இப்படத்தில் சிம்பு அவர்கள் 40 நிமிஷம் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படம் ஹன்சிக அவர்களுக்கு ஒரு திருப்புமுனை படமாக அமையும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றார்கள்.

இந்நிலையில் மஹா படத்தின் இயக்குநர் இந்த படத்தில் வில்லனாக நடிகர் ஸ்ரீகாந்த் நடித்துள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அத்துடன் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் ஜெயிலில் தம்பி ராமையா மற்றும் கருணாகரன் ஆகியோரின் கையில் உள்ள துப்பாக்கிகளின் முனையில் ஸ்ரீகாந்த் முகத்தில் புன்னகையுடன் உட்கார்ந்து கொண்டிருப்பது போன்று உள்ளது.

mahaa
mahaa

Leave a Comment