திருமணத்தையும் காசாக மாற்றினாரா ஹன்சிகா.! அட பிரபல ஓட்டிட்டு இணையதளத்திற்கு விற்று விட்டாரா.?

நடிகை ஹன்சிகா தன்னுடைய திருமணத்தையும் பிரபல ஓட்டிட்டு இணையதளத்திற்கு பெருந்தொகைக்கு விற்று விட்டதாக இணையதளத்தில் தகவல் காட்டு தீ போல் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா இவர்  விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலின், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல நடிகர்களுடன் நடித்த முன்னணி கதாநாயகியாக உயர்ந்து நடித்து வருகிறார். தமிழை தாண்டி தெலுங்கு சினிமாவிலும் ஹன்சிகா நடித்துள்ளார்.

ஹன்சிகா அவர்களுக்கு தற்பொழுது திருமணம் முடிவாகியுள்ளது இந்த நிலையில் நீண்டகால நண்பரும் தொழில் அதிபருமான மும்பையை சேர்ந்த சோகேல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது இவர்கள் திருமணம் அடுத்த மாதம் டிசம்பர் 4ம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டு கால பழமையான அரண்மனையில் நடக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

நீண்ட காலமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்த  ஹன்சிகாவிற்கு திருமணம் என்பதான் ரசிகர்கள்  சந்தோஷத்தில் இருக்கிறார்கள் மேலும் இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். சினிமாவில் ஒவ்வொரு  முன்னணி நடிகையாக திருமணம் செய்து கொண்டு வருவது ரசிகர்களிடைய அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது இதற்கு முன்பு நயன்தாரா நீண்ட காலம் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார் இப்போ எப்போ  என இழுத்துக் கொண்டு இருந்தார் ஆனால் திடீரென திருமண தேதியை லாக் செய்தார்.

நயன்தாரா விக்கிக்கு திருமணம் முடிந்த தற்பொழுது குழந்தையும் பிறந்துள்ளது இவர்கள் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுள்ளார்கள் இது ரசிகர்களிடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஹன்சிகா தன்னுடைய திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை பிரபல ஓடிடி இணையதளத்திற்கு மிகப்பெரிய தொகைக்கு பேசி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தன்னுடைய திருமணத்தையும் பிரபல ott இணையதளத்திற்கு விற்று விட்டதாக இணையதளங்களில் தகவல் தீயாய்  பரவி வருகிறது ஏற்கனவே நயன்தாரா இது போல் தனது திருமண ஒளிபரப்பு உரிமையை OTT க்கு விற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சமீபகாலமாக நடிகைகள் தங்களுடைய திருமண நிகழ்ச்சியை கூட ott க்கு விற்று  காசு பார்த்து வருகிறார்கள். இது ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment