நடிகை ஹன்சிகா தென்னிந்திய சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடி கொண்டிருக்கிறார். இவர் தமிழில் தனுஷின் மாப்பிள்ளை படத்தில் நடித்து அறிமுகமானார். முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து இவர் விஜய், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, சூர்யா போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அதிக பட வாய்ப்பு அள்ளினார்.
தொடர்ந்து வெற்றியை ருசித்து ஓடிக்கொண்டு இருந்த இவர் திடீரென உடல் எடையை குறைத்தார் படத்திற்காக தான் உடல் எடையை குறைக்கிறார் என பலரும் யோசித்த நிலையில் திடீரென திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்தார் அதன்படி தன்னுடைய நண்பரும், தொழிலதிபருமான சோஹைல் கத்துரியா என்பவரை அந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
அவர்களது திருமணத்திற்கு முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்தனர் இவர்களது திருமணம் ஜெய்பூரில் உள்ள மிகப் பழமையான அரண்மனையில் திருமணம் அரங்கேறியது. நடிகை ஹன்சிகா திருமணம் செய்து கொண்ட பிறகு உடனே ஹனிமூன்க்கு செல்ல வில்லையாம்..
சூட்டிங் கொஞ்சம் இருக்கிறதாம் அதை வெற்றிகரமாக முடித்துவிட்டு பிறகுதான் அவர்கள் ஹனிமூன் செல்ல திட்டமிட்டு இருக்கிறார்களாம். சினிமாவில் மீண்டும் அவர் தொடர்ந்து நடிப்பார் எனவும் கூறியுள்ளார் இதனால் நடிகை ஹன்சிகா ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா திருமணம் செய்து கொண்ட பிறகு தனது கணவரும் பொது இடத்திற்கு வந்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும், கமெண்டுகளையும் அள்ளி வீசி அசத்தி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய வீடியோவை..