சூட்டிங் ஸ்பாட்டில் சின்னப்பிள்ளை தனமாக கோபப்படும் ஹன்சிகா – கடுப்பான படக்குழு.?

நடிகை ஹன்சிகா முதலில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி ஒரு குறிப்பிட்ட பருவ வயதை எட்டிய பின் சினிமா உலகில் ஹீரோயின்னாக கால் தடம் பதித்தார் அந்த வகையில் முதலில் தனுசுடன் கைகோர்த்து தமிழில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயின்னாக  அறிமுகமானார்.

அதன்பின் தமிழ் சினிமாவில் இவருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தது புலி, சிங்கம் 2, போகன், வாலு, மான் கராத்தே போன்ற பல்வேறு படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருந்தார்.  தமிழில் தாண்டியும் மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருந்ததால் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக ஹன்சிகா மாறினார்.

சினிமா உலகில் ஒரு பக்கம் தனது திறமையை காட்டினாலும்  மறுபக்கமும் தனது கொழுக் மொழுக் உடலை வளைத்து காட்டி இளசுகளை தன் பக்கம் பெரிதாகவும் வளைத்துப் போட்டார் இப்படி போய்க் கொண்டிருந்த நடிகை ஹன்சிகாவுக்கு உடல் எடை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்ததால் பட வாய்ப்பை இழந்தார் மேலும் ஒரு சில உடைகள் அணிய முடியாமல் போனது.

இதனால் கிண்டலுக்கும், கேலிக்கும் ஆளானார்.  பின் தொடர்ந்து ஜிம்மே கதியென கிடந்து உடல் எடையை குறைத்து தற்பொழுது சினிமா உலகில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கி நடித்து வருகிறார்.இருப்பின்னும் விட்ட இடத்தை பிடிக்க முடியாமல் தள்ளாடி வருகிறார் இந்த நிலையில் அவர் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

அந்த படம் முழுக்க முழுக்க ஹாரர் படமாக உருவாகிறது இந்த படத்தின் சூட்டிங்கில் ஹன்சிகா செய்த செயல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.அதாவது கேமராமேன் -னின் உதவியாளர் பெயர் எனக்கு பிடிக்கவில்லை. எனவே அந்த ஊழியரை வெளியேற்றினால் தான் சூட்டிங்கில் கலந்து கொள்வேன் என ரகளை பண்ணி உள்ளார் ஹன்சிகா.

பின் இயக்குனர் ஒருவழியாக பேசிய ஹன்சிகாவை சமாதானப்படுத்திய பின் படத்தில் நடிக்க வைத்தாராம்.  சினிமாவுலகில் விட்ட இடத்தை பிடிக்க அவரவர் இருக்கின்ற இடம் தெரியாமல் நடித்து வருகின்றனர். இந்த சூழலில் ஹன்சிகா செய்யும் விஷயங்கள் ரசிகர் மத்தியில் எரிச்சலடைய வைக்கிறது இது அவரது மார்க்கெட்டுக்கு பாதகமாக அமைந்தாலும் அமையலாம்.

Leave a Comment