தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகள், நடிகர்கள் முதலில் ஒரு படத்திற்கு கமிட்டாகி பிறகு படப்பிடிப்பின்போது ஏதோ ஒரு காரணத்தினால் அப்படத்தை விட்டு விலகி விடுவார்கள். பிறகு விலகிய நடிகர் நடிகைகளுக்கு பதிலாக புதிதாக வேறு நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்துவார்கள்.
அந்த வகையில் எந்தெந்த நடிகர், நடிகைகள் எந்த படங்களை தவற விட்டு உள்ளார்கள் என்பதை தற்போது பார்ப்போம்.
திருமலை : தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் திருமலை. இந்த திரைப்படத்தில் ஹிந்தி நடிகையான அமிர்தா தான் முதலில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடித்துவிட்டு பிறகு வேண்டாம் என்று இப்படத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டார். நடிகை அமிர்தா தெலுங்கில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் மகேஷ்பாபுவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
பிரண்ட்ஸ் : தளபதி விஜய் மற்றும் சூர்யா கூட்டணியில் உருவான திரைப்படம் பிரண்ட்ஸ். இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக தேவயானி நடித்திருப்பார். ஆனால் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதலில் நடிக்க கமிட் ஆனவர் ஜோதிகா தான். ஜோதிகா இப்படத்தில் நடிக்காமல் ஒரு சில காட்சிகள் மட்டுமே படம் பிடிக்கப்பட்ட நிலையில் இப்படத்திலிருந்து நின்றுவிட்டார்.

ஆடுகளம் : தனுஷ் நடிப்பில் சற்று வித்தியாசமான கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ஆடுகளம். இத் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருப்பார். ஆனால் டாப்ஸிக்கு பதிலாக முதலில் த்ரிஷா தான் நடிக்க இருந்தார். பிறகு படக்குழுவினர்கள் புதிய நடிகைகள் வேண்டும் என்பதற்காக திரிஷாவிற்கு பதிலாக டாப்ஸியை நடிக்க வைத்தார்கள்.
தேவர் மகன் : இன்று வரையிலும் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் தேவர்மகன். இந்த திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக ரேவதி நடித்திருப்பார். இப்படத்தில் ரேவதிக்கு பதிலாக முதலில் மீனா தான் நடித்துள்ளார். ஆனால் இப்படத்தில் ரேவதிக்கு பதிலாக வேறு எந்த நடிகை நடித்தாலும் இப்படம் இந்த அளவிற்கு ஹிட்டாய்ருக்காது என்று தான் கூற வேண்டும்.
நேருக்கு நேர் : நேருக்கு நேர் திரைப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்து இருப்பார். இப்படத்தில் சூர்யாவிற்கு பதிலாக முதலில் அஜீத்தான் நடித்துள்ளார்.பிறகு சில காரணத்தினால் இப்படத்திலிருந்து விலகிவிட்டார்.
மனசெல்லாம் : இப்படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்து இருப்பார். ஆனால் இப்படத்தில் முதலில் த்ரிஷாவுக்கு பதிலாக வித்யாபாலன் நடித்துள்ளார்.
உன்னை நினைத்தேன் : இப்படத்தில் ஹீரோவாக சூர்யா நடித்து இருப்பார். இப்படத்தில் சூர்யாவிற்கு பதிலாக முதலில் விஜய் தான் நடித்திருந்தார். ஒரு சில பாடல்கள் கூட இவர் நடிப்பில் உருவாகி இருந்தது.
சந்திரமுகி: இத் திரைப்படத்தின் வெற்றிக்கு ரஜினி எவ்வளவு முக்கிய காரணமும் அதேபோல் ஜோதிகாவும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அந்தவகையில் ஜோதிகாவிற்கு பதிலாக முதலில் சிம்ரன் தான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
எந்திரன்: இப்படத்தில் ஹீரோவாகவும், ரோபோட் ஆகவும் ரஜினிகாந்த் நடித்து இருப்பார். ஆனால் இப்படத்தில் ரஜினிகாந்த்க்கு பதிலாக முதலில் கமலஹாசன்நடிக்க்யிருந்தார். இவருக்கு ஜோடியாக ப்ரீத்தி ஜிந்தா தான் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார்கள். ஆனால் இப்படத்தின் பட்ஜெட் காரணத்தினால் இவர்களுக்கு பதிலாக ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் நடித்தனர்.

இரண்டாம் உலகம் : இப்படத்தில் ஆர்யா மற்றும் அனுஷ்கா நடித்திருப்பார்கள் ஆனால் இவர்களுக்கு பதிலாக முதலில் தனுஷ் மற்றும் ஆண்ட்ரியா தான் முதலில் நடித்தனர்.
நெஞ்சம் மறப்பதில்லை : இப்படத்தில் எஸ் ஜே சூர்யா நடித்திருப்பார். ஆனால் முதலில் தனுஷ் மற்றும் சோனியா அகர்வால் இவர்கள் தான் ஒப்பந்தமாகியிருந்தார்கள்.