தமிழ்நாட்டில் உங்க படம் ஓட வாய்ப்பே இல்லை..! அக்ரிமெண்ட் போடும் முன்பே அடித்துக் கொள்ளும் தல தளபதி ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் விஜய் மற்றும் அஜித் இவர்கள் இருவருமே தற்பொழுது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருவது மட்டுமில்லாமல் சமீபத்தில் சோசியல் மீடியா பக்கம் சென்றால் எப்போதும் இவர்களுடைய திரைப்பட அப்டேட்டுகள் தான் குவிந்து கிடைக்கிறது.

அந்த வகையில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் பற்றிய அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கும் பட்சத்தில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்குள் ஏகப்பட்ட சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வருகிறது மேலும் இந்த இரண்டு திரைப்படங்களுமே ஒரே நாளில் வெளியாக இருப்பதன் காரணமாக உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதன் காரணமாக இரண்டு தரப்பு ரசிகர்களும் மாறி மாறி ஒருவருக்கொருவர் கலாய்த்துக் கொள்வது மட்டுமல்லாமல் சமீபகாலமாக ட்விட்டர் பக்கத்தில் ஒரு மிகப்பெரிய பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அவை வேற எதுவும் கிடையாது துணிவு திரைப்படத்திற்கு தான் தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என்று அஜித் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ஏனென்றால் துணிவு திரைப்படத்தின் வெளியிட்டு உரிமையை உதயநிதி அவர்கள் கைப்பற்றி உள்ளார் சமீபத்தில் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படத்தை வாங்கி வெளியிட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது துணிவு திரைப்படத்தையும் வாங்கியுள்ளதன் காரணமாக தமிழகத்தில் அதிக தியேட்டரில் துணிவு திரைப்படம் தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அஜித் ரசிகர்கள் பரிசு திரைப்படத்தை வெளியிட ஒரு தியேட்டர் கூட கிடைக்கவில்லை என்று ஒரு கருத்தை பரப்பி வருகிறார்கள் இதனால் கடுப்பான விஜய் ரசிகர்கள் துணிவு திரைப்படத்திலிருந்து இதுவரை ஒரு அப்டேட் கூட வெளியாகவில்லை ஆனால் வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது பாடல் கூட வெளியாக போகிறது ஆகையால் இன்னும் துணிவு திரைப்படத்திற்கு தியேட்டர்கள் ஒதுக்கப்படவில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் இது குறித்த முறையான அப்டேட்டுகள் எதுவும் வெளியாக வில்லை என்றாலும் ரசிகர்கள் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் திரைப்படம் வெளியாவதற்கு  சில நாட்களுக்கு முன்பாக தான் தியேட்டர்கள் ஒதுக்கப்படும் அக்ரிமெண்டுகள் நடக்கும் ஆனால் இன்னும் இந்த திரைப்படத்திற்கு அக்ரீமெண்ட் கையெழுத்தாகவில்லை அதற்குள் ரசிகர்கள் இப்படி சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.

எது எப்படியோ இவர்களுடைய சண்டை இன்னும் சில நாட்கள் நாம் சகித்துக் கொண்டு சமூக வலைதள பக்கத்தில் பார்த்து தான் ஆக வேண்டும் என இரண்டு தரப்பு ரசிகர்களும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version