‘ஜெய்பீம்’ படத்தில் பழங்குடியின பெண்ணாக நடித்த பிரபல நடிகையின் திருமண புகைப்படம் இதோ.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இவர் சமீப காலங்களாக சமூகத்திற்கு நல்ல கருத்தினை தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சூர்யா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றினை பெற்ற திரைப்படம் தான் ஜெய்பீம்.

இந்த திரைப்படத்தில் பழங்குடியின பெண் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை லிஜோமோல் திருமண புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பெரும் புரட்சி ஏற்படுத்திய திரைப்படம் தான் ஜெய்பீம். தமிழில் உருவான இந்த திரைப்படம் ஏராளமான நாட்டு மக்களை கவர்ந்து கண்ணீரை வரவழைத்தது.

அந்த அளவிற்கு உன்னத பூர்வமான தகவலை வெளிப்படுத்திய நிலையில் இந்த படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தது. அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்திற்கு பல விருதுகளும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த நடிகை தான் லிஜோமோல்.

jiyo mol
jiyo mol

ஜெய்பீம் படத்தில் பழங்குடியின பெண்ணாக நடித்து அசதி இருந்தார். இந்நிலையில் தற்பொழுது இவர் அருண் ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொண்டார் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி இவர்களுடைய திருமணம் கேரளாவில் உள்ள வயநாடு பகுதியில் நடந்தது. இந்த திருமணத்திற்கு சூர்யா, ஜோதிகா, பிரகாஷ்ராஜ் ஏராளமான பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

lijomol 1
lijomol 1

ப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர்களுடைய திருமண புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை நிஜோமோல் இதற்கு முன்பு அன்னபூரணி, காதல், பொதுவுடமை உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

lijomol 2
lijomol 2

Leave a Comment