மகாலட்சுமி இன்னும் 4 நாள் அந்த மாதிரி கண்டிஷன் போட்டு இருந்தா.? அவளை டைவர்ஸ் பண்ணி இருப்பேன் – ரவீந்தர் பேச்சு..!

அண்மைக்காலமாக வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை ஜோடிகள் பலரும் திருமணம் செய்து கொண்டு அசத்துகின்றனர் இவர்களது திருமணம் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது. விக்கி நயன்தாரா திருமணத்தை தொடர்ந்து சோசியல் மீடியாவை அதரவிட்டவர்கள் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி..

இவர்கள் இருவரும் கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த இரண்டு ஜோடிக்கும் இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடிகள் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் அதை ரசிகர்கள் கொண்டாடியும் ஒரு பக்கம் விமர்சித்தும் வந்த வண்ணமே இருக்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் இவர்களது திருமணம் நடந்து பத்து நாட்கள் ஆகி உள்ளன சமூக வலைதள பக்கத்தில் இன்னும் இவர்களது செய்தி தான் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. இந்த நிலையில் instagram லைவில் வந்த ரவீந்தர் தன்னுடைய விவாகரத்து பற்றி பேசி உள்ளார். அவர் சொல்லி உள்ளது என்னவென்றால் நான் என் திருமண புகைப்படத்தை யாருக்கு அனுப்பாமல் சமூக வலைதளத்தில் மட்டும் தான் வெளியிட்டேன்.

மகாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடைச்சா வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க ஆனால் அந்த மகாலட்சுமியே வாழ்க்கையா கிடைச்சான்னு சொல்லி ஒரே ஒரு போட்டோ மட்டும்தான் வெளியிட்டேன். அதுக்கு அப்பறம் என்னோட வாழ்க்கையை மாறிடுச்சு எங்களை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. என்னுடைய மனைவி கேமராவுக்கு அந்த பக்கம் இருந்துகிட்டு என்ன இல்லன்னு சொல்ல சொல்றா, மகாலட்சுமி வெட்கப்படுறார்ன்னு தான் நீங்க சொல்லணும் என்ன கேமராவுக்கு முன்னாடி வர்ற முடியாதுன்னு சொல்றா.

உனக்காக நான் அந்த சீரியலை பார்த்தேன் என்னை பிராண்ட் ப்ரோமோட் பண்ண சொல்றா.. அதுமட்டுமா நைட்டு பத்து மணிக்கு அன்பே வா சீரியலை பார்க்க சொல்றா இந்த சீரியலை இன்னும் நாலு நாள் பார்த்திருந்தால் கண்டிப்பாக அவளை டைவர்ஸ் பண்ணி இருப்பேன் என்ன நைட் பத்து மணிக்கு அன்பே வா சீரியல் பார்க்க வச்சிட்டா அந்த சீரியல் முடிஞ்ச பிறகு நைட்டு பத்து முப்பது மணிக்கு நான் லைவில் வந்திருக்கிறேன், இங்க பயங்கரமான கண்டிஷன் எல்லாம் போயிட்டு இருக்கு என ரவீந்தர் கூறியுள்ளார்.

Leave a Comment