H வினோத் எடுத்த அதிரடி முடிவு..! வலிமை திரைப்படத்தில் இப்படி ஒரு மாற்றமா ரசிகர்கள் அப்செட்…

தல அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை நேர்கொண்டபார்வை திரைப்படத்தை இயக்கிய வினோத் தான் இயக்கி வருகிறார்.

அதேபோல் இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார், படத்தை ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது இந்த படப்பிடிப்பில் அஜித் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டுள்ளார்கள்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணத்தால் வலிமை திரைப்படத்தில் உள்ள ஒரு சில ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் பைக் சேஸிங் காட்சிகள்  இருப்பதாகவும் அந்த காட்சிகளை வெளி நாட்டில் எடுக்க வேண்டுமென திட்டமிட்டிருந்தார் வினோத் ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக அந்த காட்சிகளை இந்தியாவிலேயே படமாக்க அவர் முடிவு செய்திருந்தார்.

இதற்காக அணைத்து  பணிகளும் பரபரப்பாக நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் ஹெச் வினோத் திடீரென அவரது திட்டத்தை மாற்றிக் கொண்டார், வலிமை திரைப் படத்தில் சில சேசிங் காட்சிகள் உள்நாட்டில் மட்டுமே படமாக்கப்பட வேண்டிய நிலையில் இருப்பதாகவும்.

அதில் பல சர்வதேச ஸ்டண்ட் கலைஞர்கள் பங்கு பெற இருப்பதாகவும் அவர்களை இந்தியாவுக்கு வரவழைத்து படப்பிடிப்பு நடத்துவது சாத்தியம் இல்லை அதனால் ஒரு சில மாதங்கள் தாமதம் ஆனாலும் பரவாயில்லை அந்த காட்சிகளை வெளிநாட்டில் மட்டுமே எடுக்க வேண்டுமென அதிரடியாக கூறி விட்டாராம்.

அதனால் வலிமை திரைப்படம் இன்னும் ஓரிரு மாதங்கள் கால தாமதம் ஆகலாம் என தெரிகிறது இதனால் ரசிகர்கள் அப்செட்டில் இருக்கிறார்கள்.

வலிமை திரைப்படத்தில் அஜித் சர்வதேச போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் அதுமட்டுமில்லாமல் அவருக்கு ஜோடியாக ஹீமா குரோஷி நடித்து வருகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமத்து வருகிறார். இந்த திரைப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து இருக்கிறார்கள் ரசிகர்கள்.

Leave a Comment