துணிவு படத்தின் அப்டேட்டை கொடுத்த ஹெச் வினோத்.! அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

thunivu
thunivu

இயக்குனர் ஹச் வினோத் கூட்டணி நடிகர் அஜித்குமார் இணையும் மூன்றாவது திரைப்படமான துணிவு திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக காத்திருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் சிங்கள் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்லா வரவேற்பை பெற்று பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்த நிலையில் மாறுபட்ட அஜித்தின் லுக்கை பார்த்து ரசிகர்கள் துணிவு படம் எப்போது வெளியாகும் என காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் இயக்குனர் ஹெட்ச் வினோத் ஒரு புதிய அப்டேட்டை கொடுத்து இருக்கிறார். அதாவது துணிவு படத்தில் அஜித்தின் லுக்கில் ஒரு சின்ன முன்னோட்டத்தை பார்த்த ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

மேற்கொண்டு படக்குழு வெளியிட உள்ள ப்ரோமோக்களை பார்த்தால் ரசிகர்கள் என்ன செய்வார்கள் என தெரியவில்லை என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவருடைய இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் துணிவு திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து இருக்கிறது.

தற்போது துணிவு திரைப்படத்திற்காக போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக உள்ள துணிவு திரைப்படத்துடன் வாரிசு திரைப்படமும் மோத இருக்கிறது.

இந்த நிலையில் வாரிசு திரைப்படத்திற்காக பட குழு தீவிர பிரமோஷன் செய்து வருகிறது அந்த வகையில் சமீபத்தில் சென்னையில் உள்ள மின்சார ரயில்களில் வாரிசு படத்தின் போஸ்டர்களை ஒட்டி ப்ரமோஷன் செய்து வருகிறது அதுமட்டுமல்லாமல் கபாலி படம் போல் விமானத்திலும் போஸ்டர்கள் ஒட்டி விளம்பரம் செய்ய இருக்கிறார்கள் என்று கூறப்பட்டது.

ஆனால் துணிவு திரைப்படத்திற்காக எந்த ஒரு பிரமோசனும் செய்யாமல் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான சில்லா சில்லா பாடல் ரசிகர் மத்தி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாக இருக்கிறதாக கூறப்படுகிறது.

காசேதான் கடவுளடா என தொடங்கும் இந்த பாடல் தற்போது ரெடியாகி கொண்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது இந்த நிலையில் அடுத்த பாடலுக்கு காத்திருக்கும் ரசிகர்களை தற்போதே துணிவு அப்டேட்டை கூறி உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் எச் வினோத்.