சினிமா உலகில் ஆண்டுதோறும் பல படங்கள் வெளியாகி வருகின்றன. படங்களை எடுக்க இயக்குனரும், தயாரிப்பாளரும் பல கடின உழைப்பு போட்டிருந்தாலும் அதை ஒரே நிமிஷத்தில் விமர்சனம் என்ற பெயரில் கிண்டலும், கேலியும் செய்து அவற்றை ஒரே நொடியில் படத்தை குறை கூறுபவர் ப்ளூ சட்டை மாறன். சமீபகாலமாக வரும் படங்களை விமர்சனம் என்ற பெயரில் கிண்டல் செய்து வருபவர். புதுமுகங்கள் இலிருந்து முன்னணி நடிகர்கள் ரஜினி கமல் அஜித் விஜய் போன்றேர் படங்கள் வரை பாரபட்சம் பார்க்காமல் கிண்டல் ,கேலி செய்து வருபவர்.
ப்ளூ சட்டை மாறன் புது படங்களை விமர்சிப்பதை பார்பதற்காகவே அவரை பல லட்சம் பேர் தொடர்ந்து தொடர்கிறார்கள். இதுவரை அவருக்கு 9 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்கிரைப் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய விமர்சனங்களால் சினிமா பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கடும் கோபத்தில் உள்ளார்கள் என்றே கூறவேண்டும்.
ப்ளூ சட்டை மாறன் படத்தை இயக்கும் எண்ணத்துடன் தான் சினிமா துறைக்கே வந்ததாக தெரிய வருகிறது இவர் முதலில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் ஆனால் அவருக்கு சரியான படவாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் அவர் விமர்சகராக மாறி உள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் விமர்சகராக மாறி பிரபலமாகி வருகிறார். இந்தநிலையில் ஜீவா அவர்கள் நடிப்பில் வெளிவந்த ஜிப்ஸி படத்தை ப்ளூ சட்டை மாறன் அவர்கள் கழுவி ஊற்றினார் அதிலும் குதிரைக்காரன், அவன், இவன் போன்ற ஏகப்பட்ட வசனம் பேசியும் இருந்தார். இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை விமர்சித்து வருகின்றனர்.
https://youtu.be/TyuECsEjUTc
இதனைப் பார்த்த ஜீவா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் ரியாக்ட் செய்துள்ளார். அது என்னவென்றால் அடப்பாவி கமெண்ட் செய்துள்ளார் ஜீவா. ஜீவா அவர்களை ப்ளூ சட்டை மாறன் கண்டமேனிக்கு கூறியிருந்தாலும் அவரது ரியாக்ஷன் சாதாரணமாக இருந்ததால் ஜீவா அவர்களை அவரது ரசிகர்கள் போராடி வருகின்றனர்.
Ada Pavi 😂😂😂 https://t.co/dlpOQaXvVN
— Jiiva (@JiivaOfficial) March 9, 2020