அடப்பாவிகளா இப்படியும் ஒரு பர்ஸ்ட் லுக்கா.! ஜிவி பிரகாஷின் பேச்சுலர் போஸ்டரை பார்த்து ரசிகர்கள் சரமாரி கேள்வி

0

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும்  நடிகராகவும்  இருப்பவர் ஜிவி பிரகாஷ், இவரின் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருக்கும், அதேபோல் இவரின் பல திரைப்படங்கள் ஏதாவது ஒரு விஷயத்திற்காக இளைஞர்களை ஈர்த்து விடுகிறது. அந்த வகையில் திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் டைட்டிலுக்காகவே அதிக அளவில் பேசப்பட்டது.

அதேபோல் கடைசியாக நடித்த குப்பத்து ராஜா திரைப்படம் ரசிகர்களிடம் வைரலானது அந்த வகையில் தற்போது ஜிவி பிரகாஷ் நடித்துவரும் பேச்சுலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பல விதமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஒரு ரசிகர் தல வைக்கிற இடமா என கேவலமாக கேட்டுள்ளார், மேலும் ஒரு ரசிகர் உங்களுக்கு மட்டும் எப்படி மூளை இப்படி யோசிக்கிறது என கேட்டுள்ளார், இப்படித் தாறுமாறாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள் ட்விட்டரில்.