சமூக வலைதளத்தில் ஜிவி பிரகாசுக்கு உதவி கேட்டு ஒரு பதிவு வந்துள்ளது. அந்த பதிவில் எங்களுக்கு சிறுவயதில் இருந்து அப்பா இல்லை தவறிவிட்டார். அம்மா தான் வேலைக்கு போய் படிக்க வைத்துக் கொண்டிருந்தார் இப்பொழுது அம்மாவும் இறந்துவிட்டார்.
இறுதி சடங்கு பண்ண கூட எங்களிடம் காசு இல்லை உதவி பண்ணுங்கள் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்கள். அதனைப் பார்த்து ஜிவி பிரகாஷ் 20000 பணம் அனுப்பி உள்ளார் அது மட்டும் இல்லாமல் அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அதை பார்த்த பலரும் அந்த கணக்கிற்கு பணம் அனுப்பியுள்ளார்கள்.
ஆனால் அம்மா இறந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு 3 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது. அந்த வீடியோ யூடியூபில் இருப்பதாகவும் ஜீவி பிரகாஷ் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் சோசியல் மீடியாவில் ஆதாரத்துடன் பதிவிட்டு வருகிறார்கள்.