அஜித் விஜய் கூட செய்யாததை செய்த GV பிரகாஷ் ராஜ்.! பாராட்டும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் நடிகராக திகழ்ந்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ்.  இவர் அவ்வளவு தத்ரூபமாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் ஆவார். மேலும் இவர் இசைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை எந்த நடிகரும் செய்யாத வேலையை துணிச்சலாக செய்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் சூரரைப்போற்று இந்த திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார்கள். அந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் மேலும் தெலுங்கு திரைப்படங்களில் கூட இசையமைக்க ஜிவி பிரகாஷ் கமிட்டாகியுள்ளார்.

ஜிவி பிரகாஷ் இதற்கிடையே பல திரைப்படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவர் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து புதுபுது இயக்குனர்களுடன் இதுவரை நடித்து வருவதாக தெரிவித்துள்ளனர். இவர் சுமார் 20 இயக்குனர்களுடன் நடித்து புது புது இயக்குனர்களை தமிழ் சினிமாவில் அறிமுகப் படுத்தியுள்ளார்.

இதற்கு எடுத்துக்காட்டாக டார்லிங் நடித்து சாம் அண்டனை தமிழ் சினிமாவில் அறிமுகப் படுத்தி வைத்தார். அந்த இயக்குனரின் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை இயக்கி  முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பேச்சுலர். அந்த திரைப்படத்தில் இயக்குனர் சதீஷ் செல்வகுமார்  திரையுலகில் அறிமுகப்படுத்தினார். அந்த திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

மேலும் இயக்குனர் சதீஷ் செல்வகுமார் அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்கி வருகிறார். அதனிடையே கிரிக்கெட் வீரர் தோனியின் தயாரிப்பில் ஒரு திரைபடத்தை இயக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ஜிவி பிரகாஷ் இந்த மாதிரி புது புது இயக்குனர்களுடன் நடித்து பல இயக்குனர்களை அறிமுகப்படுத்தி அவரது வாழ்க்கையை புதுப்பித்துள்ளார்.

இதனால தான் பல இயக்குனர்கள் மேடையில் ஜிவி பிரகாஷ் பற்றி  புகழ்ந்து வருகிறார்கள். புது புது இயக்குனர்கள் உடன் நடிப்பது அவ்வளவு சாத்தியமில்லை முன்னணி நடிகர்கள் கூட புது இயக்குனர்களுடன் நடிக்க ஒப்பந்தம் ஆக மாட்டார்கள். ஆனால் ஜிவி பிரகாஷ் நடித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார்.

Leave a Comment