பிரம்மாண்ட சீரியலுக்கு பாடல் காம்போஸ் செய்த ஜிவி பிரகாஷ்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

தமிழ் திரை உலகில் இளம் இசையமைப்பாளராக வளம் வருபவர் தான் இயக்குனர் ஜி வி பிரகாஷ் இவ்வாறு பிரபலமான நமது இசையமைப்பாளர் சிறந்த இசையமைப்பாளர் மட்டும் இன்றி நடிகரும் கூட அந்த வகையில் இவர் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த புகழ் பெற்றுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நடிகர் ஜிவி பிரகாஷ் அவர்கள் பல முக்கிய திரைப்படங்களில் இசையமைப்பது மட்டுமில்லாமல் பல பாடல்களையும் பாடி சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் நமது இசையமைப்பாளர் அவர்கள் தொலைக்காட்சி தொடர் ஒன்றுக்கு இசையமைத்துள்ளார்.

அந்த வகையில் அவர் கம்போஸ் செய்த பாடல் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அந்த தொடரானது டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் கனா காணும் காலங்கள் தொடராகும் இந்த தொடர் ஆனது பள்ளி வாழ்க்கை அடிப்படியாக வைத்து எடுக்கப்பட்ட கதை ஆகும்.

அந்த வகையில் இந்த தொடரை பலரும் ரசித்து பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டது மட்டும் இல்லாமல் சமீபத்தில் எல்லாமே ஜாலிதான் என்ற வகையில் அனைவரையும் எழுந்து ஆட்டம் போட வைக்கும் அளவிற்கு ஜி வி பிரகாஷ் அவர்கள் ஒரு பாடலை கம்போஸ் செய்துள்ளார்.

இவர் ஜி வி பிரகாஷ் இசையில் உருவாகிய இந்த பாடலை ஜி கே பி  அவர்கள் எழுதியுள்ளார் மேலும் இந்த பாடலை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மத்தியில் பிரபலமான ஆதித்யா என்பவர் இந்த பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பாடல்  சுமார் சில  நிமிடங்களிலே  பல்வேறு பார்வையாளர்களை உருவாக்கியது மட்டுமில்லாமல் மாபெரும் வெற்றி பாடலாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment