கவுதம் மேனன் இயக்கம் படத்தில் வில்லனாக களமிறங்கிய பிரபல நடிகர்.! எகிறும் எதிர்பார்ப்பு

0

திரை உலகில் பல வெற்றி படங்களை தந்து முன்னணி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் கௌதம் மேனன். இவர் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார் அந்த வகையில் 2001 ஆம் ஆண்டு திரையுலகிற்கு அறிமுகமான மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார், இதனை தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா உட்பட பல திரைப்படங்களை இயக்கி திரை உலகில் இயக்குனராக கலக்கி வருகிறார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு இந்தி உட்பட இரு மொழிகளிலும் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் என்னை நோக்கி பாயும் தொட்ட , துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் தற்பொழுது கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இந்த நிலையிலும்கூட கௌதம் மேனன் தனது தொழிலை விட்டு விடாமல் கார்த்திக் டயல் செய்த எண் மற்றும் ஒரு சான்ஸ் கொடு ஆகிய குறும்படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் தற்போது இவர் நடிகர் வருண் மற்றும் நடிகை ராஹே  ஆகியோர்களை வைத்து ஜோஸ்வா இமையோர் காக்க என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறாராம் அதில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கிருஷ்ணா வில்லனாக நடிக்க உள்ளார் என்று கௌதம் மேனன் அறிவித்துள்ளார்.

நடிகர் கிருஷ்ணா கழுகு, வீரா,  வானவராயன் வல்லவராயன், பண்டிகை, வன்மம், யாமிருக்க பயமே,  கிரகணம் உட்பட பல படங்களில் நடித்து திரையுலகில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருகிறார்.

gautham menon
gautham menon