2வது பெண் குழந்தைவுடன் போட்டோ ஷூட் நடத்திய நடிகர் கின்னஸ் பக்ரூ.!

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் பிரபலமானவர்தான் கின்னிஸ் பக்ரூ இவர் தமிழில் மட்டுமல்லாமல் தொடர்ந்து ஏராளமான மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நிலையில் தன்னுடைய உயரம் கம்மியாக இருந்தாலும் அதனை வைத்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றார். அந்த வகையில் நகைச்சுவை நடிகராக கலக்கி வந்த இவர் தற்பொழுது தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் ஆரம்ப காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.

மேலும் இவர் தமிழைத் தொடர்ந்து மலையாளம் படங்களில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நகைச்சுவை நடிகராக டிஷ்யூம், நடிகர் விஜய்யடன் காவலன், சூர்யாவின் 7ம் அறிவு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

இவ்வாறு தற்பொழுது நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் சமீபத்தில் பிரபுதேவா நடிப்பில் வெளியான பஹிரா படத்தில் சின்ன ரோலில் நடித்திருந்தார். இப்படிப்பட்ட நிலைையில் கடந்த 2006ஆம் ஆண்டு  காயத்ரி மோகன் என்பவரை பக்ரூ திருமணம் செய்துக் கொண்டார். தற்பொழுது இவருக்கு 14 வயதில் மகள் இருக்கும் நிலையில் மீண்டும் அப்பாவாகி உள்ளார்.

இவ்வாறு திருமணமாகி 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் பக்ரூ அப்பாவாகி இருக்கும் நிலையில் இந்த குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்திருப்பதாக தன்னுடைய சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார் அது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.

guinness pakru
guinness pakru

இப்படிப்பட்ட நிலையில் மனைவி மற்றும் தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளுடன் பக்ரூ குரூப் போட்டோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது மேலும் ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment