ஒரு பொண்ண தொடணும்னா முதல்ல அவ மனசு தொடணும் சிம்பு வசனத்தில் வெளியாகியது மஹா படத்தின் டீசர் 2.!

தனது உடல் எடையை முழுமையாக குறைத்து நிறைய திரைப்படங்களை கைப்பற்றி நடித்து வரும் நடிகர் தான் சிம்பு இவர் சின்னஞ்சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் பார்த்தால் இவர் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் பொழுதே பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இவர் கதாநாயகனாக தற்போது பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மேலும் இவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாகிக் கொண்டே போகிறது என்றுதான் கூறவேண்டும் அந்த வகையில் பார்த்தால் இவர் நடிப்பில் முதலில் ஈஸ்வரன் என்ற திரைப்படம் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டானது அதனைத் தொடர்ந்து சிம்பு இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் மேலும் மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து மஹா,வெந்து தணிந்தது காடு போன்ற பல திரைப் படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு இந்த திரைப்படத்தில் சிம்பு பார்ப்பதற்கு 15 வயது சிறுவன் போல் காட்சி அளிக்கிறார் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிக வேகமாக சமூக வலைதளங்களில் வைரலாகியதை  நாம் பார்த்திருப்போம்.

மேலும் மஹா திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலாக எதிர்பார்த்து வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் மஹா திரைப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்து விடும் என கூறப்படுகிறது மஹா திரைப்படத்திலிருந்து சிம்புவின் பல புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம்.

அதேபோல் தற்போது மஹா திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சிம்புவை பாராட்டி வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் இந்த டீஸரை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருவது மட்டுமல்லாமல் பலரும் சிம்புவை நாங்கள் பார்ப்பதற்கு மிக ஆவலாக இருக்கிறோம் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment