முன்னணி நடிகை சரண்யா பொன்வண்ணன் வாழ்ந்து வரும் “பிரம்மாண்ட வீட்டை” பார்த்து உள்ளீர்களா.? இதோ புகைப்படம்.!

கமல் நடிப்பில் வெளியான நாயகன் படத்தில் நடித்து அறிமுகமானவர் சரண்யா பொன்வண்ணன் அதன் பின் இவர் மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது, சிவப்பு தாலி, அன்று பெய்த மழையில் நான் புடிச்ச மாப்பிள்ளை என பல்வேறு படங்களில் ஹீரோயின் ஆகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமடைந்தார்.

இருப்பினும் ஒரு காலகட்டத்திற்கு மேல் இவருக்கு சினிமா உலகில் அம்மா சித்தி குணச்சித்திர கதாபாத்திரங்களே பெரிதும் கிடைத்தன. இருப்பினும் அதிலேயும் தனது திறமையை காட்டி நடிக்க ஆரம்பித்தார். சரண்யா பொன்வண்ணன் தமிழ் சினிமாவையும் தாண்டி கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டத்தில் இவர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் வெற்றி படங்களாக மாறியதால் இவரது மார்க்கெட்டு தற்பொழுதும் உச்சத்திலேயே இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் வெளியாகும் பெருமாளான படங்களில் இவர்தான் அம்மா சித்தி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக அஜித், விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுக்கு அம்மா, சித்தி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர். 2022ல் கூட ஏழு, எட்டு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார் அதில் முக்கியமாக விருமன், மழை பிடிக்காத மனிதன், கல்லா பார்ட், வரலாறு முக்கியம், ganster granny, இடி முழக்கம் போன்ற படங்களில் மிக தீவிரமாக நடித்து வருகிறார் சரண்யா.

இந்த நிலையில் சினிமா பிரபலங்கள் வாழ்ந்து வரும் வீட்டின் புகைப்படங்களை நாம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம் அதுபோல  நடிகை சரண்யா பொன்வண்ணன் வாழ்ந்து வரும் வீட்டின் புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

saranya

Leave a Comment

Exit mobile version