பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் “GRAND FINALE” எப்போது தெரியுமா.? வெளியான தகவல்.

சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வரை ஐந்து சீசன்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இல் பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸில் கலந்து கொள்ள சில முக்கிய போட்டியாளர்கள் கலந்துகொண்டு அசத்தி வருகின்றனர். இதில் வாரம் வாரம் ஒவ்வொரு போட்டியாளர் வெளியேறுகின்ற நிலையிலும் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக சில பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டினுள் நுழைந்து சிறப்பாக ஒளிபரப்பாகி வருகின்றன.

மேலும் சென்ற வாரம் கூட விஜய் டிவி பிரபலங்களான சாண்டி மாஸ்டர் மற்றும் கே பி ஒய் தீனா இருவரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு வந்து மக்கள் மற்றும் போட்டியாளர்களை என்டர்டெய்ன்மெண்ட் செய்து வருகின்றனர். சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களையும் தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமலஹாசன் தொடங்கி சில வாரங்கள் தொகுத்து வழங்கி வந்த நிலையில் சில காரணங்களால் அவர் வெளியேறியதை அடுத்து தற்போது பிரபல நடிகர் சிம்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 70 நாட்கள் என குறிப்பிட்டு இருந்தாலும் தற்போது வரை பல போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருப்பதால் இந்த நிகழ்ச்சி எப்போது முடியும் எனவும் ரசிகர்கள் பலரும் குழம்பி வருகின்றனர் இதன்படி பிக் பாஸ் பைனல் குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது. பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் பைனல் எபிசோட் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளிவந்துள்ளது.

Leave a Comment