மீசை கூட ஒழுங்கா முளைக்கல.! 2k கிட்ஸ் வீடியோவை பார்த்து ஆத்திரமடைந்த ஜி பி முத்து.!

0

தற்பொழுது எல்லாம் சினிமா நடிகர்கள்,நடிகைகளை பார்த்து மக்களும் அவர்களைப் போல் ஆக வேண்டும் என்பதற்காக டிக் டாக்,மியூசிக்கலி,டப்மாஸ் போன்றவைகளை பயன்படுத்தி அதன் மூலம் தற்போது பிரபலமாகி வருகிறார்கள் அதிலும் குறிப்பாக டிக் டாக் என்ற செயலி இருந்த பொழுது பச்சை குழந்தையில் இருந்து வயதான பெரியவர்கள் முதல் அதில் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை என்ற அளவிற்கு போகிவிட்டது மேலும் டிக் டாக் என்ற செயலி மூடப்பட்டது என்ற செய்தி பொதுமக்களுக்கு மிகவும் திருப்தியாக இருந்தது என்றுதான் கூறவேண்டும்.

இவர்கள் இந்த செயலின் மூலம் பொதுமக்களை படாத பாடு படுத்தியது மட்டுமல்லாமல் அந்த டிக் டாக் செயலி மூடப்பட்ட போது அதில் வீடியோ போட்டு வந்தவர்கள் அனைவரும் தற்போது யூடியூப்,இன்ஸ்டாகிராம்,ட்விட்டர் என மாறிவிட்டார்கள் அதிலும் குறிப்பாக யூடியூபில் இளைஞர்கள் பண்ணும் சேட்டையை விட தற்பொழுது 2k கிட்ஸ் பண்ணும் சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது 2k கிட்ஸ் பண்ணும் வீடியோ வை பார்த்து 90 கிட்ஸ் ஆத்திரம் அடைந்து வருகிறார்கள்.

அந்த அளவிற்கு 2k கிட்ஸ் காதல் என்ற பெயரில் வீடியோ போடுவது 90 கிட்ஸ்க்கு பிடிக்கவில்லை அந்த வகையில் தற்போது பள்ளி செல்லும் வயதில் ஒரு சிறுவன் டிக் டாக் மூலம் பிரபலமானவர் தான் குட்டி வடிவேலு இவர் பள்ளிக்கு செல்லும் வயதில் இவரது காதலியுடன் வீடியோ போடுவது 90கிட்ஸ்க்கு மிகவும் பொறாமையாகத்தான் இருக்கிறது.

இவர் காதல் பண்ணுகிறேன் என்ற பெயரில் இவரது வயது இருக்கும் சிறுமியை காதலித்து வருகிறார் அந்த வகையில் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து தினமும் டப்மாஷ் வீடியோவை சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.அதேபோல் இவர்களது பெற்றோர்களும் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் ஜாலியாக மருமகளே,மருமகனே என கூப்பிடுகிறார்கள் இந்தக் குட்டி வடிவேலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சமீபத்தில் யாரோ ஹேக் செய்து விட்டார்கள்.

தனது  இன்ஸ்டாகிராம்  பக்கம் யார் ஹேக் செய்தார்கள் என்பதை தெரியாமல் இவர் பள்ளிக்கு செல்லும் வயதில் எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை யாரோ ஹேக் செய்து விட்டதாக தனது காதலியுடன் வீடியோ காலில் பேசி கொண்டுள்ளார் அப்போது அந்தப் பையனின் அம்மா மருமகளே நீங்கள் இரண்டு பேரும் நன்றாக வருவீர்கள் உங்களது மீது எனக்கு நம்பிக்கை அதிகமாக இருக்கிறது என கூறுகிறார்.

அதுமட்டுமல்லாமல் இன்னொரு வீடியோவில் இந்த சிறுமியின் அம்மா மருமகனே மருமகனே என கூப்பிடும் போது எடுத்த வீடியோ காணொளி தற்பொழுது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனைப் பார்த்த பொதுமக்களும் 90 கிட்ஸ்களும் தாங்க முடியாமல் இவரது வீடியோக்களுக்கு எதிராக பல விமர்சனத்தை செய்து வருகிறார்கள்.பொதுமக்களும் இவர்களைச் சொல்லிக் குற்றமில்லை இவர்களது பெற்றோர்களை சொல்ல வேண்டும் மேலும் இந்த வீடியோ காணொளி பார்த்த ஜி பி முத்து இவர்களது பெற்றோர்களை வாய்க்கு வந்தபடி திட்டி உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோவை பார்த்த ஜி பி முத்து மீசையே முளைக்கல ஒருத்தனுக்கு  லவ்வு ஒரு கேடா என அந்த சிறுவனை திட்டியது மட்டுமல்லாமல் அந்த சிறுவனுக்கு துணையாக பேசும்  அவர்களது பெற்றோர்களையும் இவர் வாய்க்கு வந்தபடி திட்டி உள்ளார் மேலும் இவர் திட்டும் பொழுது எடுத்த வீடியோ காணொளி தற்போது சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.