விஜய் டிவி-யை நாரடிக்கபோகும் ஜிபி முத்து.! ஆஃப்ர வேற அள்ளித்தராங்களே vijay tv

டிக் டாக் செயலி மூலம் பல மக்கள் பிரபலம் அடைந்து வந்தார்கள், அந்த வகையில் டிக் டாக் செயலிமூலம் மிகவும் பிரபலமடைந்து வந்தவர்களில் ஜி பி முத்து என்பவரும் ஒருவர். செத்த பயலே நார பயலே என்று பேசியே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார். ஆரம்ப காலகட்டத்தில் ஜிபி முத்துவை கொச்சை கொச்சையாக ரசிகர்கள் விமர்சித்து வந்தார்கள் ஆனால் போகப் போக அவருக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் அதிகமாகி வருகின்றன.

இந்த நிலையில் டிக் டாக் செயலியை முடக்கியதும் ஜி பி முத்து என்ன செய்வது என்று தெரியாமல் அடுத்ததாக இன்ஸ்டகிரம் லைவ்வில் வந்து சென்றார். இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஜி பி முத்து அடுத்ததாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் அதிவேகமாக பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். விரைவில் 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை தொட இருக்கிறார்.

ஜி பி முத்து அவர்களுக்கு ரசிகர்கள் மட்டும் வரவேற்பு கொடுக்கவில்லை பல சினிமா பிரபலங்களும் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள் இந்த நிலையில் ஜி பி முத்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஜி பி முத்து சன்னி லியோன் நடிக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என ஒரு தகவல் வெளியானது. இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியிலும் விரைவில் ஜி பி முத்து வர இருக்கிறார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

விஜய் டிவி தொகுப்பாளர்கள் பலரும் ஜி பி முத்து அவர்களுக்கு ரசிகராக இருப்பதால் அவரை வைத்து டிஆர்பியை ஏற்றி கொள்ளலாம் என விஜய் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி ஜிபி முத்துவிற்கு 2 ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றில் பங்கேற்க வைக்க இருக்கிறார்கள். ஜி பி முத்து ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகழ் மற்றும் சிவாங்கி இருவருமே இடம் பெயர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது அதேபோல் அடுத்ததாக ஜிபி முத்துவை களமிறக்கி அவர்களுக்கு நிகராக வளர்த்துவிட இருக்கிறது விஜய் தொலைக்காட்சி. இந்த  நிலையில் ஜி பி முத்து அவர்களுக்கு பல தொகுப்பாளர்கள் சப்போர்ட் செய்து வருகிறார்கள் என கூறப்படுகிறது.

விரைவில் விஜய் டிவியின் சொத்தாக மாற இருக்கிறார் ஜிபி முத்து அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒருவேளை பங்கேற்கவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது எது எப்படியோ விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஜி பி முத்து அவர்கள் வர இருக்கிறார் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

vijay tv
vijay tv

Leave a Comment