துணிவு திரைப்படத்தில் தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ள ஜி பி முத்து..! அதுவும் எப்படிப்பட்ட ரோல் தெரியுமா..?

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து வலிமை திரைப்படத்தில் கூட்டணி வைத்த வினோத் மற்றும் அஜித் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளார்கள் இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் தயாரித்தது மட்டுமில்லாமல் இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெறும் என கூறியுள்ளார்கள்.

அந்த வகையில் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி இயக்கப்பட்ட திரைப்படம் ஆகும் என ஏற்கனவே இந்த திரைப்படத்தில் இயக்குனர் வினோத் அவர்கள் தெரிவித்துள்ளார் மேலும் இதற்கு அஜித் தலைமையான கேங் ஒன்றுதான் இந்த செயல்கள் அனைத்தையும் செய்துவரும்.

மேலும் இந்த திரைப்படத்தில் தல அஜித் உடன் இணைந்து பணியாற்றிய பல்வேறு பிரபலங்கள் பற்றிய செய்திகள் வெளியாகி உள்ளது அதாவது பிக் பாஸ் புகழ் பவானி அமீர் சிபி ஆகியவர்கள் இந்த திரைப்படத்தில் தல அஜித் உடன் இணைந்து நடித்துள்ளார்கள் அது மட்டும் இல்லாமல் தற்பொழுது மேலும் ஒரு பிக் பாஸ் பிரபலம் ஆகும் இந்த துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது.

அவர் வேறு யாரும் கிடையாது பிக் பாஸ் ஆறாவது சீசனில் இரண்டு வாரங்கள் மட்டும் போட்டியாளராக கலம் இறங்கி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஆட்டம் கொடுத்த ஜி பி முத்து தான் அந்த வகையில் ஜிபி முத்துக்கு இந்த துணிவு திரைப்படத்தில் ஒரு சின்ன ரோல் கொடுத்துள்ளதாக இயக்குனர் வினோத் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதனை பார்க்கும் பொழுது அஜித்தின் துணிவு திரைப்படத்தில் நடிக்க ஆசைப்பட்டு தான் பிக் பாஸ்  நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து வெளியேறினாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment