இப்பல்லாம் பள்ளிகூடத்தில் பாடம் நடத்துவதே இல்லை.! மற்ற வேலையை தான் பார்க்கிறோம்.! உண்மையை போட்டு உடைத்த அரசு பள்ளி ஆசிரியர்கள்

0
83

தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வேலை மேல் வேலை கொடுத்து பணிச்சுமையை அதிகப்படுத்துவதால் மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்த முடியவில்லை என ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளார். தங்களுக்கு வழங்கப்படும் பணிச் சுமையைக் குறைத்தால் மட்டுமே அரசு பள்ளிகளில் முழுமையான தேர்ச்சி விகிதத்தை காட்ட முடியும் என தெரிவித்துள்ளார்கள் இதுகுறித்து அவர்கள் கூறியதாவது.

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகள் 37 ஆயிரத்து 358 அரசு பள்ளிகளும் உதவிபெறும் பள்ளிகள் 8386, தொடக்கப்பள்ளி நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மொத்தம் 45 ஆயிரத்து 744 பள்ளிகளில் அரசு பள்ளிகளில் 54,71,544 மாணவர்களும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 28,44 ,693 மாணவர்களும் படிக்கிறார்கள்.

தற்பொழுது மிகச் சிறந்த முறையில் புதிய பாடத்திட்டம் அமைத்து தரமான கல்வியை அளிப்பது பள்ளிக்கல்வித்துறை மேலோங்கி உள்ளது ஆனால் அப் பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல ஆசிரியர்களுக்கு முழு வாய்ப்பளிக்க வேண்டும் அப்போதுதான் கற்றல்-கற்பித்தல் பணிகள் சிறப்பாக அரசு பள்ளியை நடத்த முடியும், கல்வித் தரமும் உயரும்.

பரவலாக அரசு பள்ளி என்றாலே ஆசிரியர்கள் குறித்தும் கல்வித்தரம் இல்லை என்றும் தவறாக சித்தரித்து வருவது வேதனை அளிக்கிறது, வருடம் முழுவதும் பல்வேறு பணிகளில் ஈடுபட செய்து இடையே கல்வி கற்பித்தல் பணி நடைபெற்றால் அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் உயரும், அதேபோல் அரசு பள்ளிகளில் அலுவலர்கள் ஊழியர்கள் கணினி உதவியாளர்கள் இல்லாததால் அவர்கள் வேலைகளையும் ஆசிரியர்களே செய்வதால் கற்பித்தல் பணி மிகவும் பாதிக்கிறது.

மாணவர்களுக்கு ஆதார் அட்டை,சாதிச்சான்றிதழ், சிறுபான்மை மற்றும் ஆதிதிராவிடர் உதவித்தொகை, வாக்காளர் சரிபார்ப்பு பணிகளான BLO,DLO இதுத்தவிர அரசுவழங்கும் 14 வகையான சலுகைகள், திறன் தேர்வு இணையதளத்தில் பதிவுசெய்தல் EMIS கல்வி மேலாண்மை தகவல் முகமை உள்ளிட்ட தொடர்பணிகளுக்கிடையே ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் என அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டுவருகிறார்கள்.

மேற்கண்டப் பணிகள் எதுவும் தனியார் மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்கள் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் கடந்த 14.10.2019 முதல் ஆசிரியர்களுக்கு 5 நாள்கழ் பயிற்சி நடைபெற்று வருகிறது.

வாரந்தோறும் இரண்டு மூன்று ஆசிரியர்கள் பாயிற்சியென்பதால் கற்றல்-கற்பித்தல் பெரும்பாதிப்பிற்குள்ளாகுகிறது.இப்பயிற்சிகள் மாநிலப் பாடத்திட்டத்தில் நடத்தும் தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு இல்லை. எனவே அரசுப்பள்ளிகளை மேம்படுத்த அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வித்தரத்தினை உயர்த்திட அரசுப்பள்ளி ஆசொரியர்களுக்கு முழுமையாக கற்பித்தல் பணிசெய்திட வாய்பப்பளிக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் அரசுப்பள்ளிகளில் தேவையான அலுவலக ஊழியர்கள் கணினி உதவியாளர்களை நியமித்திடவும், மாணவர்களின் கல்வியினைப் பாதிக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நடத்தும் தேசிய அளவில் பள்ளித்தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் மேம்பாட்டுத்திறனிற்கான முன்னெடுப்பு நிஷ்தா பயிற்சியினை ஐந்து நாள்களிலிருந்து இரண்டு நாளாக குறைத்திட நடவடிக்கை எடுத்திடவும் அரசுப்பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்திட அரசுப்பள்ளி ஆசிரியர்களை முழுமையாக கற்பித்தல் பணி மட்டும் செய்திட வாய்ப்பளிக்கும்படி மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிந்து வேண்டுகின்றேன்.