அனைத்து அரசு பள்ளிகளிலும் இனி ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி எடப்பாடி அரசு அதிரடி அறிவிப்பு.

0

அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி அளிப்பதற்கு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலம் சரளமாக பேசவும் ஆங்கிலத்தில் சரளமாக தங்கள் திறனை வெளிப்படுத்தவும் இந்த அதிரடி ஆணை பிறப்பித்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 90 நிமிடத்திற்கான ஒரு பாட வேளையில் 40 நிமிடங்கள் ஆங்கிலம் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சிக்கு ஒதுக்க உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல் ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை 45 நிமிடம் பாட வேளையில் ஸ்போக்கன் இங்க்லீஷ் காக நேரம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.

அந்த அரசாணையில் கூறியதாவது” தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறனை மேம்படுத்துவதற்காகவும் ஆங்கிலப் பேச்சுத் திறன் விருப்பத்தினால் தனியார் பள்ளிகளில் சேர்க்கை நாடும் பெற்றோர்களின் எண்ணிக்கை குறைத்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்திலும் ஆங்கிலப் பேச்சுத் திறன் வளர்ப்பு ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியை மாணவர்களுக்கு அளிக்கும் வகையில்  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆங்கில மொழியிலும் சரளமாக உரை நிகழ்த்தும் வகையிலான பேச்சாற்றலை பெறுவதற்கு முறையான பயிற்சியை அளித்து அதனை அடைய தொடர் முயற்சியை  ஊக்கப்படுத்தும் பொழுது ஆங்கில மொழியில் ஒரு மாணவரது பேச்சாற்றலை கண்டிப்பாக வளர்க்க இயலும் இம்முயற்சி அம் மாணவரின் ஆங்கில மொழி பயிற்சி ஆற்றலை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது. ஆங்கிலப் பாடத்தில் சுயமாக கற்றறிந்து தான் கற்ற பாடத்தின் கருத்துகளை வெளிப்படுத்தும் திறனை வளர்க்க பெரிதும் உதவியாக இருக்கும்.

மேலும் மாணவர்கள் பள்ளிக் கல்வியை முடித்த உயர்கல்வி பயிலும் போது அதனைத் தொடர்ந்து வேலை வாய்ப்புக்கான நேர்முகத் தேர்வுக்கும் மற்றும் பிற மாநில மற்றும் பிற நாடுகளில் பணிபுரியும் போது ஆங்கில மொழி உரையாடல் என்பது தவிர்க்க முடியாததாக உள்ளது.

கற்றல் கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் ஆங்கில ஆசிரியர்கள் மேற்கொள்ளவும் மாணவர்களை ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு பயிற்சி அளிக்கவும் ஆங்கிலத்தில் பேச்சு திறனை வளர்த்தல் கட்டகம் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

spoken-english
spoken-english