மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி.! இது காலாண்டு விடுமுறையே கிடையாது குமுறும் பள்ளி மாணவர்கள்.!

Government school quarterly leave : பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் விடுமுறை நாட்களை எண்ணி காத்துக் கொண்டிருப்பார்கள் ஏனென்றால் விடுமுறை நாட்கள் வந்தால் விளையாடலாம் ஜாலியாக சுற்றி வரலாம் என பலரும் கனவு கோட்டை கட்டி வந்தார்கள் இந்த  நிலையில் தற்பொழுது ஒரு தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பள்ளி மாணவர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அதாவது காலாண்டு விடுமுறை சமீபத்தில்  அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு நாள் மட்டுமே காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கதறி வருகிறார்கள். தமிழகத்தில் நான்கு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் இது காலாண்டு விடுமுறையே கிடையாது மொத்தத்தில் ஒரே ஒரு நாள் மட்டுமே விடுமுறை என மாணவர்கள் வருத்தத்துடன் கருத்து தெரிவித்து வருகிறார்கள். செப்டம்பர் 28ஆம் தேதி வினாடி நம்பி அரசு விடுமுறை செப்டம்பர் 30ஆம் தேதி சனிக்கிழமை அரசு விடுமுறை  அக்டோபர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை. அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி என்பதால் அரசு விடுமுறை.

இப்படி அனைத்தும் அரசு விடுமுறை நாட்களில்லையே காலாண்டு விடுமுறை நாட்கள் வந்து விடுகிறது செப்டம்பர் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டுமே ஒரே ஒரு நாள் மட்டுமே எங்களுக்கு காலாண்டு விடுமுறை என மாணவர்கள் குமரி வருகிறார்கள். இதனால் சக மாணவர்கள் இது காலாண்டு விடுமுறையே கிடையாது ஒரே ஒரு நாள் விடுமுறை மட்டுமே என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.