கமல் வீட்டிற்கு ஒட்டப்பட்ட கொரோனா நோட்டீஸ்.? அதிகாரிகள் விளக்கம்.!

இந்தியா முழுவதும் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. அதே போல் தமிழகத்திலும் பரவி வருகிறது. அதனால், மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமலஹாசன் கொரோனாவில் இருந்து தங்களை காப்பதற்கு நாங்கள் எங்களை தனிமைப் படுத்திக் கொண்டோம் என கூறியுள்ளார். இந்த நிலையில் கமலஹாசன் வீட்டில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனாவை தடுக்கும் விதமாக வெளிநாட்டிலிருந்து சமீபத்தில் நாடு திரும்பியவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்கள். அதே போல் அவர்களின் வீடுகளில் கதவில் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டையில் நடிகர் மற்றும் மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டது, மாநகராட்சி சார்பில் ஒட்டப்பட்ட நோட்டீஸில் கொரோனாவிலிருந்து எங்களையும் சென்னையையும் காக்க தலைமை படுத்திக் கொண்டோம் என்ற எழுதப்பட்டது. இதில் கமலஹாசன் பெயர் மற்றும் முகவரி இடம்பெற்றுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளில் ஒட்டப்படும் கொரொன நோட்டீஸ் உள்ளே வரக்கூடாது என்ற வசனங்கள் இந்த நோட்டீசில் இடம்பெற்றுள்ளது. இருந்தாலும் கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, பின்பு அந்த ஸ்டிக்கர் உடனடியாக அகற்றப்பட்டது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, பாஸ்போர்ட் அடிப்படையில் வந்த தகவலை அடுத்து கமலஹாசன் கட்சி அலுவலகம் தனிமைப்படுத்த பட்டதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனையடுத்து இந்த, அலுவலகத்தில் யாரும் இல்லை என தகவல் வந்ததையடுத்து நோட்டீஸ் அகற்ற பட்டதாகவும் விளக்கமளித்தார்.

பேட்டியளித்த சுருதிஹாசன் தங்கள் குடும்பத்தில் எல்லோரும் தனிமைப்படுத்தி கொண்டோம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment