அரசு வேலையில் இருப்பவர்கள் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் இனி ஆப்பு.! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0
marrige
marrige

அரசு வேலையில் இருப்பவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாள் அந்தத் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உச்ச நீதிமன்றம் மதுரை கிளையில் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

மதுரையில் உள்ள தேன்மொழி என்பவர் தனது கணவரின் ஓய்வூதியத் தொகையை வாங்குவதற்காக மனுதாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, இந்த வழக்கை எஸ் எம் சுப்பிரமணியம் விசாரணைக்கு வந்தது இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் உடனடியாக அந்தத் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவை பிறப்பித்தார்.

அதேபோல் ஓய்வூதியம் பரிந்துரைக்கும் ஆவணங்கள் அனைத்தும் முறையாக சரி பார்த்து மட்டுமே ஒப்புதல் வழங்க வேண்டும், மேலும் இந்த மனுதாரரின் கணவர் ஒரு காவல் அதிகாரி இரண்டாவது திருமணம் செய்து கொள்வது குற்றம் என்று தெரிந்தே தவறு செய்துள்ளார்.

2 திருமணம் செய்துகொள்வது நன்னடத்தை ஆகாது அது குற்றம். எனவே அரசு ஊழியர்கள் முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவது திருமணம் செய்துகொண்டாள் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேவைப்பட்டால் குற்ற வழக்கு பதிவு செய்ய பரீசிலனை செய்யப்படும் எனவும் தமிழக அரசுக்கு மதுரை கிளை உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.