அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்பம் செலுத்த கடைசி தேதி மற்றும் கட்டண விவரங்கள் இதோ..

தற்பொழுது கொரோனா காரணமாக பள்ளி,கல்லூரிகள் திறப்பதற்கு தாமதமாகி வருகிறது.இந்த நிலையில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பின் ரிசல்ட் வெளிவந்துள்ளது.அந்த வகையில் தற்போது அரசு கலை மற்றும் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேதி, விண்ணப்பிக்க செய்ய வேண்டிய கட்டணம் ஆகிய விவரங்களை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் அரசு கலைக்கல்லூரியில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இணையதளத்தின் மூலமாக ஜூலை 20-ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் இணையதளத்தின் வாயிலாக சான்றிதழ்களை ஜூலை 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை பதிவேற்றலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் மாணவர்கள் www.tngasa.in, www.dceonline.org என்கின்ற இணையதளத்தின் வாயிலாக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் விண்ணப்பிக்கும் மாணவர்கள் பொதுப்பிரிவினர் 48 ரூபாய் கட்டணம் மற்றும் இரண்டு ரூபாய் பதிவு கட்டணத்தை இணையதளத்தின் வாயிலாக செலுத்த வேண்டும். இதில் எஸ்சி,எஸ்டி மாணவர்களுக்கு சிறப்பு சலுகையாக விண்ணபிக்க கட்டணம் கிடையாது என்றும் பதிவு கட்டணம் ரெண்டு ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும் என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment