பணத்திற்காக பல பேர் முன்னிலையில் அசிங்கப்படுத்திய கவுண்டமணி.! நன்றி மறக்காத விஜயகாந்த் என்ன செய்தார் தெரியுமா.?

இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பல திறமைகளை தமிழ் சினிமாவில் சரியாக பயன்படுத்தி புகையின் உச்சத்திற்கே சென்றவர் கங்கை அமரன் இவருக்கும் இளையராஜாவிற்கும் ஏற்பட்ட பிரச்சனையால் சினிமாவிலிருந்து ஒரேடியாக விளகி 14 வருடங்களுக்கு மேல் இளையராஜா அண்ணன் மூஞ்சில் முழிக்காமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கங்கை அமரன் தான் பட்ட பணக்கஷ்டத்தை பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார். அவர் கூறியதாவது பொதுவாக கங்கை அமரன் எழுத்தாளராகவும் இயக்குனராகவும் 20 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அதேபோல் கங்கை அமரன் திரைப்படம் என்றாலே கவுண்டமணி கண்டிப்பாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். கங்கை அமரன் பல திரைப்படங்களில் கவுண்டமணி அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் ஆனால் ஒரு முறை பணத்திற்காக கங்கை அமரனையே கவுண்டமணி அவமானப்படுத்தி உள்ளது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

அதாவது கோயில் காளை என்ற திரைப்படத்தை கங்கை அமரன் அவர்கள் தான் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, கங்கை அமரன் தான். அதேபோல் இந்த திரைப்படத்துக்கு இசையமைப்பாளராக இளையராஜா அவர்கள் பணியாற்றியிருந்தார் படத்தில் விஜயகாந்த் சுஜாதா வீரபாண்டியன் பலர் நடித்திருந்தார்கள்.

இந்த கோயில் காளை திரைப்படத்தில் ராமசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் கவுண்டமணி அப்பொழுது பணப்பிரச்சையினால் கங்கை அமரன் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தார் அந்த சமயத்தில் தன்னுடைய பணம் கங்கை அமரன் கஷ்டத்தால் வராமல் போய்விடுமோ என எண்ணி கடனால் தவித்துக் கொண்டிருந்த கங்கை அமரனிடம் எனக்கு கொடுக்க வேண்டிய சம்பள பணத்தை கொடுங்கள் என கேட்டுள்ளார். கவுண்டமணி எப்பொழுதும் சம்பள விஷயத்தில் கொஞ்சம் கண்டிப்புடன் இருக்கக்கூடியவர் தான் பணம் வருமா வராதா என்ற சந்தேகத்தில் தான் படத்தை நடித்த உடனே பணத்தை கேட்டுள்ளார்.

அது மட்டும் இல்லாமல் படத்தை முடித்து பணத்தை கொடுக்கவில்லை என்றால் என்னால் டப்பிங் வரமுடியாது என மேனேஜர் மூலம் கூறியுள்ளார். அதனால் எப்படியாவது படத்தை வெளியிட்டு சம்பளத்தை கொடுத்துள்ளார் கங்கை அமரன். தன்னை கவுண்டமணி இப்படி அவமானப்படுத்தி விட்டாரே என பல நாட்கள் கங்கை அமரன் வருத்தப்பட்டுள்ளார். இதில் என்ன ஒரு ஆறுதல் என்றால் அந்த திரைப்படத்தில் நடித்த விஜய்காந்த் நீங்கள் எதற்கும் பயப்பட வேண்டாம் கவலைப்படாதீர்கள் பண விஷயம் அனைத்தும் சரியாகிவிடும் என மிகவும் ஆறுதலாக பேசிய உள்ளாராம். கங்கை அமரன் அன்றிலிருந்து இன்று வரை கவுண்டமணி மூஞ்சிலேயே முழிக்காமல் இருந்து வந்துள்ளார்.

Leave a Comment