கவுண்டமணி முதலில் தொட்டு கும்பிடும் புகைப்படம் இதுதான்.. சாமி போட்டோ இல்லை.! ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த செய்தி

80,90 காலகட்டங்களில் புகழ்பெற்ற காமெடி நடிகராக விளங்கியவர் கவுண்டமணி. இவருடைய நக்கல் கலந்த நகைச்சுவை வசனங்கள், டைமிங்கில் காமெடி பண்ணுவது இவருக்கு ரொம்பவும் கைவந்த கலை இவருடைய காமெடி ஒவ்வொன்றும் ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்க வைப்பதால் அப்பொழுது ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு உருவாகினர்.

ஒரு கட்டத்தில் செந்திலுடன் இணைந்தார் இவர்களுடைய காம்போ சிறப்பாக இருந்ததால் இரண்டு பேரும் வருடத்திற்கு குறைந்தது 20 படங்களுக்கு மேல் நடித்து வந்தனர். அவருடைய மார்க்கெட் பெரிய அளவில் உயர்ந்தது ஒரு கட்டத்தில் நடிகர் நடிகைகளை விட இவருடைய வளர்ச்சி பெரிய அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட கவுண்டமணி சமீபகாலமாக ஹீரோவாக தான் நடித்து வருகிறார். ரசிகர்கள் அவரை திரையில் பார்த்தால் போதும் என்ற எண்ணத்தில் இருந்து வருகின்றனர் இந்த நிலையில் பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் காமெடி நடிகர் கவுண்டமணி பற்றி பேசியது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது..

காமெடி நடிகர் கவுண்டமணி தனது வீட்டில் தாமஸ் ஆல்வா எடிசனின் புகைப்படத்தையும் அதற்கு அருகில் பெருமாள் புகைப்படத்தையும் வைத்திருப்பாராம்.. எப்பொழுதும் முதலில் தாமஸ் ஆல்வா எடிசனின் புகைப்படத்தை தொட்டு கும்பிட்டு விட்டு அதன் பிறகு தான் பெருமாளின் புகைப்படத்தை தொட்டு கும்பிடுவாராம்.. தாமஸ் ஆல்வா எடிசன் சினிமாவை கண்டுபிடித்ததால் முதலில் அவரது புகைப்படத்தை தொட்டு கும்பிட்டு விட்டு..

thamos
thamos

அதன் பிறகு தான் பணம் கொட்டிக்கொடுக்கும் பெருமாள் புகைப்படத்தை தொட்டு கும்பிடுவார் காமெடி நடிகர் கவுண்டமணி என கூறினார். விஷயத்தை கேள்விபட்ட ரசிகர்கள் இப்படி ஒரு வித்தியாசமான பழக்கத்தை கொண்டவராக கவுண்டமணி என கூறி கமெண்ட்  வருகின்றனர். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment