தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ். முன்னணி நடிகைகளுக்கு கூட தற்பொழுது படவாய்ப்பு இல்லாத நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் தான் இருக்குமிடம் தெரியாமல் பட வாய்ப்புகளை அள்ளிக் கொண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தற்போது பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் தெலுங்கில் வெளியான கனா ரீமேக் படம் பெரிய வசூல் சாதனை பெற்றது இதனை தொடர்ந்து அவர் தன் கைவசம் பல படங்களை வைத்துள்ளார் தற்போது அவர் அடுத்ததாக பொன்னின்செல்வம் முதல் பாகத்தில் நடிக்க உள்ளார்.அதை அடுத்து துருவநட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை போன்ற பல படங்கள் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
ராஜேஷ் அவர்கள் கேரக்டர் சிறப்பாக இருந்தால் எந்த ஒரு கேரக்டரையும் ஏற்று நடிப்பார் என்பது நாம் அறிந்ததே ஏனென்றால் இதற்கு முன்பு நம்ம வீட்டு பிள்ளை படத்தில் தங்கை கேரக்டரிலும் நடித்திருந்தார் அதை அடுத்து காக்கா முட்டை படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதன் முலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் ஆனால் ஊடகங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் போன்ற கேரக்டரில் நடித்தால் படவாய்ப்புகள் இழக்க நேரிடும் என பலர் கூறிவந்தனர் இருப்பினும் தமிழ் சினிமா இவரை இன்னும் மேலும் மேலும் தூக்கிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறது அப்படி என்று தான் சொல்ல வேண்டும்.
ஆரம்பகால வாழ்க்கையில் சன்டிவி குடும்பத்தில் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர். அதனை எடுத்து படிப்படியாக சின்ன சின்ன கேரக்டரில் நடித்து தற்போது வளர்ந்து உள்ளார். இப்பொழுது அவர் தமிழ் சினிமாவில் வளரும் நடிகையாக மாறி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அவர் திருமணம் முடிந்து விட்டது போல நெற்றி உச்சியில் குங்குமத்துடன் இருக்கும் போட்டோ இணையதளத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது இதனை பார்த்த அவரது ரசிகர்கள் எனது ஐஸ்வர்யாவுக்கு திருமணம் ஆயிடுச்சா என தற்ப்பொழுது கேள்வி எழுப்பி வருகின்றனர். அதிகார பூர்வ தகவல் இல்லை.