பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய கோபி.! அவரே கூறிய வீடியோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..

baakiya-lakshmi-36
baakiya-lakshmi-36

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியல் 1000ம் எபிசோடுகளையும் தாண்டி மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது.

இந்த சீரியலின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் சதீஷ் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த சீரியல் இந்த அளவிற்கு பிரபலமடைவதற்கு முக்கிய காரணமாக விலகி வருகிறார். இந்த சீரியலின் ஆரம்ப காலகட்டத்தில் கோபியை பலரும் திட்டி வந்தார்கள் ஏனென்றால் இவர் தன்னுடைய குடும்பத்தினர்களுக்கு தெரியாமல் கல்லூரி காதலியிடம் தகாத உறவில் இருந்து வந்தார்.

எனவே ஒரு கட்டத்தில் பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் பாதுகாப்பிடம் மாட்டிக் கொண்டு படாத பாடு பட்டு வருகிறார். எனவே சமீப காலங்களாக மிகவும் காமெடியாக இவருடைய கதாபாத்திரம் இருந்து வந்ததால் ரசிகர்கள் இவரை ரசிக்க தொடங்கினார்கள் மேலும் இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதீஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அதில், அனைவருக்கும் வணக்கம்.. நான் சொல்ல போறது நிறைய பேருக்கு கோபம், எரிச்சல், வருத்தம் போன்றவற்றை வர வைக்கலாம். கஷ்டமா இருக்கு இருந்தாலும் இதை செஞ்சு ஆகணும். இன்னும் கொஞ்ச நாட்களில் அதாவது இன்னும் 10, 15 எபிசோடுகளில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து நான் விலகுகிறேன்.

அதில் எந்த மாற்றமும் இல்லை சதீஷ் ஆகிய நான் கோபியாக நடிச்சிக்கிட்டு இருக்கிற இந்த கேரக்டரை விட்டு நான் விலக காரணங்கள் பல இருக்கு இருந்தாலும் கொஞ்சம் பர்சனல் காரணம் இந்த கோபி கதாபாத்திரத்தை நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு மிகவும் நன்றி நானும் யாருக்கும் எந்த கஷ்டமும் கொடுக்காமல் எல்லோரும் பாராட்டும்படி என்னால் முடிந்தவரை சுமாராக நடித்துள்ளேன். இந்த வாய்ப்பை கொடுத்த விஜய் டிவிக்கும் என் மீது அன்பு காட்டிய உங்கள் அனைவருக்கும் நன்றிகள் என தெரிவித்துள்ளார் எனவே இதனால் சதீஷ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..