2025-ல் இன்டர்நெட்டில் தேடப்பட்ட 10 திரைப்படங்கள். லிஸ்டில் இடம் பிடித்த ரஜினி திரைப்படம்.

ஒவ்வொரு வருடமும் கூகுளில் பல்வேறு துறைகளில் அதிகம் தேடப்பட்ட பட்டியலை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட 10 திரைப்படங்களை தற்பொழுது பட்டியல் இட்டுள்ளது.

இதில் முதலிடத்தில் இருக்கும் திரைப்படத்தை பார்த்தால் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

சயாரா: கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் லிஸ்டில் இந்த திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அஹான் பாண்டே  மற்றும் அனீத் பத்தா நடித்த இந்த திரைப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் காதல் கதை. இந்த திரைப்படம் 45 கோடி பட்ஜெட்டில் உருவாகி 600 கோடி வரை வசூல் செய்தது.

இரண்டாவது இடத்தில் காந்தாரா ரிஷப்செட்டி இயக்கி நடித்த காந்தாரா 2 திரைப்படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது அதேபோல் இந்த வருடத்தில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்தது.

கூலி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய இந்த திரைப்படத்தை ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் தேடி உள்ளார்கள். இந்த திரைப்படம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. படத்தில் அமீர்கான், நாகர்ஜுனா, உள்ளிட்டவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்கள்.

வார் 2 : கிருத்திக் ரோஷன் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தில் க்யாரா அத்வானி நாயகியாக நடித்திருந்தார் இந்த ஆண்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இந்த திரைப்படம் நாலாவது இடத்தில் அதிக கூகுளில் தேடப்பட்ட இடத்தை பிடித்துள்ளது.

தனம் தெரி கசம் : இந்த திரைப்படம் 2025-ல் வெளியான திரைப்படம் கிடையாது. 2016 ஆம் ஆண்டு தான் வெளியானது இந்த திரைப்படம் இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. எதிர்பாராத விதமாக 50 கோடிக்கு மேல் வசூலை செய்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் ஐந்தாவது இடத்தை பிடித்தது.

மார்க்கோ : மலையாள திரை உலகில் வன்முறை நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக வெளியான இந்த திரைப்படம் டிசம்பர் 20ஆம் தேதி 2024 இல் திரையரங்கில் ரிலீஸ் ஆனது ஆனாலும் 2025 ஆம் ஆண்டு google-ல் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் லிஸ்டில் ஆறாவது இடத்தை பிடித்தது.

ஹவுஸ் ஃபுல் 5: ஹிந்தியில் உருவான இந்த திரைப்படம் லாஜிக் பார்க்காமல் காமெடி மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்து கதையை தாண்டி நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த திரைப்படம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படத்தின் லிஸ்டில் ஏழாவது இடத்தை பிடித்தது.

கேம் சேஞ்சர் : சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் இந்த திரைப்படத்தில் கியர அத்வானி நாயகியாக நடித்திருந்தார் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்திருந்தார் வெளியாகிய இந்த திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்தாலும் ஆனாலும் கூகுள் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் எட்டாவது இடத்தை பிடித்திருந்தது.

மிஸஸ்: கூகுளில் இந்த வருடம் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ள திரைப்படம் mrs மலையாளத்தில் வெளியான கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படத்தின் இந்தி ரீமேக் தான் இந்த திரைப்படம். கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் ஒன்பதாவது இடத்தை இந்த திரைப்படம் பிடித்துள்ளது.

மஹாவதார் நரசிம்ஹா: அஸ்வின் குமார் இயக்கத்தில் உருவான இந்த அனிமேஷன் திரைப்படம் இந்த ஆண்டு அதிகம் வசூலை ஈட்டிய திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளது அதேபோல் 40 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 300 கோடிக்கு மேல் அதிக வசூலை ஈட்டியது அனிமேஷனிலும் கிராபிக்ஸ்ஸிலும் ரசிகர்களை கவர்ந்தது இந்த நிலையில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களில் பத்தாவது இடத்தை இந்த திரைப்படம் பிடித்துள்ளது.