சாண்டி விட்டில் நடந்த நல்ல விஷயம்.! சந்தோஷத்தின் உச்சியில் குடும்பம்.! வாழ்த்தும் பிரபலங்கள்.

தொலைக்காட்சியில் நடனம் ஆடி பின்னாட்களில் சினிமா பக்கம் நடன இயக்குனராக அறிமுகமானவர் சாண்டி. ஆரம்பத்தில் இவருக்கு சொல்லிக்கொள்ளும்படி ரசிகர் பட்டாளம் கிடையாது ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையை வெளிக்காட்டி படங்களில் அவ்வப்போது சின்ன ரோல்களில் நடனம் ஆட தொடங்கினார்.

இந்த நிலையில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் கைகொடுத்தது இதில் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்தார். அதனால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வளர்த்துக் கொண்டால் அதிலிருந்து வெளிவந்த இவருக்கு படவாய்ப்புகளும் குவிய தொடங்கி தற்போது ஒரு புதிய திரைப்படத்தில் ஹீரோவாக கமிட்டாகி நடித்து வருகிறார்.

அதோடு மட்டுமல்லாமல் பல்வேறு படங்களுக்கு டான்ஸ் மாஸ்டர் ஆகவும் பணியாற்றி வருகிறார்.ஒரு பக்கம் இருந்தாலும் முதலில் கைகொடுத்துகு தொலைக்காட்சி தான் என்பதால் அதிலும் நடன கலைஞராக தொலைக்காட்சியில் பெரிதும் பணியாற்றி வருகிறார்

இவர் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடும்போது அதில் காமெடியையும் புகுத்தி மக்களை மகிழ்விக்கும் படியான பாடலை அமைப்புக்கு ஏற்றவாறு தனது நடனத்தை வெளி காட்டி அனைவரையும் சந்தோஷப்படுவார்.

இந்த நிலையில் சாண்டி மாஸ்டர் வீட்டில் ஒரு விஷயம் நடந்து உள்ளது. அதாவது அவரது மனைவி சில்வியா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார் இதை  பெரிய அளவில் கொண்டாட முடியாத சூழ்நிலையில் தற்போது ஏற்பட்டுள்ளதால் வீட்டிலேயே சிம்பிளாக நலங்கு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வருகின்றன.

Leave a Comment

Exit mobile version