குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்தி.!ரசிகர்களே ரெடியா.

விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விடவும் மிகவும் என்டர்டைன்மென்ட்டாக பல எதிர்பார்ப்புகளுடன் பிரபடைந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனைவிடவும் இரண்டாவது சீசன் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது. அதுமட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சி சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம் என்று  ரசிகர்களை மிகவும் என்டர்டைன்மென்ட் செய்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பலருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் அஸ்வின், பாலா, புகழ், சிவாங்கி, பவித்ரா உள்ளிட்ட இன்னும் பலர் சினிமாவில் நடிகர்,நடிகைகளாக நடிக்க கமிட்டாகியுள்ளார்.

கடந்த மாதம் குக் வித் கோமாளி சீசன் 2 நிறைவுபெற்றது. எனவே அனைத்து ரசிகர்களும் மீண்டும் எப்பொழுது இந்த நிகழ்ச்சியை தொடங்கும் என்று மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து வருகிறார்கள். இந்நிலையில்  குக் வித் கோமாளி சீசன் 2-வின்டைட்டில் வின்னராக வெற்றி பெற்றவர் கனி.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் இறுதியில் நடிகர் சிம்பு கலந்து கொண்டு சிறப்பித்தார். எனவே இந்நிகழ்ச்சி மீண்டும் ஞாயிற்றுக்கிழமை 7:30மணியிலிருந்து மதியம் 12:30 மணி வரையிலும் ஒளிபரப்பாக உள்ளதாம்.  இந்த தகவல் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment