பிக்பாஸ் கவின்னுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்.! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைய போகிறாரா.? வெளியான மாஸ் தகவல்.

kavin-and-nayanthara
kavin-and-nayanthara

விஜய் டிவி சீரியலில் மூலம் தனது பயணத்தை தொடங்கி பின் படிப்படியாக முன்னேறி தற்பொழுது வெள்ளித்திரையில் ஹீரோவாக நடித்து வருகிறார் கவின். மேலும் ஹீரோ என்ற அந்தஸ்தையும் தாண்டிய தற்பொழுது நெல்சன் திலிப் குமாரின் அசிஸ்டெண்ட் டைரக்டராக சேர்ந்து பணியாற்றியும் வருகிறார்.

இதுவரை மாஸ்டர், டாக்டர் போன்ற படங்களைத் தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் விஜயை வைத்து இயக்கி வரும் பீஸ்ட் படத்திலும் அசிஸ்டெண்ட் ஆக பணியாற்றி வருகிறார். இப்படியிருக்க கவின் இயக்குனர் வினித் வரப்பிரசாத உடன் இணைந்து “லிப்ட்” என்ற திரைப்படத்தில் நடித்தார். மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடித்திருந்தார்.

இந்த படம் முழுக்க முழுக்க பேய் சம்பந்தப்பட்ட படமாக இருந்தாலும் சில நல்ல மெசேஜ் எடுத்து சொல்லி உள்ளதால் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிடித்த படமாக அமைந்துள்ளது. நேற்று பிக்பாஸ் 5 வது சீசனில் கோலாகலமாக தொடங்கியது. இதில் கவின் நடனம் ஆடி அசத்தினர். லிப்ட் படத்தில் இடம்பெற்றுள்ள என்ன மயிலு பாடலுக்கு அசத்தலான ஒரு நடனத்தை கொடுத்து பலருக்கும் ஆச்சரியப்படுத்தினார்.

தற்போது சினிமாவுக்கு ஏற்றவாறு நடிப்பு, டான்ஸ் என அனைத்திலும் வேற லெவல் பர்பாமன்ஸ் கொடுத்து வருகிறார். இந்நிலையில் கவின் அடுத்ததாக ஒரு புதிய படத்தில் இணைய உள்ளார் அந்த படத்தை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்து உருவாக்கியுள்ள ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தான் இந்தப் படத்தைத் தயாரிக்க உள்ளது.

ஆனால் இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயின் கிடையாது ஹீரோயினாக நடிக்கப் போவது வாணிபோஜன் என கூறப்படுகிறது. மேலும் வெகு விரைவிலேயே டைரக்டர் மற்றும் நடிகர்களைப் பற்றிய விவரம் அதிகாரபூர்வமாக விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.