மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. லட்சத்தை தாண்டியது. கிராமுக்கு எவ்வளவு தெரியுமா

ஆபரண தங்கத்தின் விலை நேற்று அவனுக்கு 1600 உயர்ந்து ஒரு லட்சத்து 2160 என புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தங்கத்தின் விலை டிசம்பர் 12ஆம் தேதி 98960 ஆக இருந்து வந்தது அதேபோல் டிசம்பர் 15 ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. இது வரலாறு காணாத விலை அதிகரித்ததால் மக்கள் பீதியில் உறைந்தார்கள் இந்த நிலையில் நேற்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

நேற்று தங்கம் விலை 102160 என புதிய உச்சத்தை தொட்டுள்ளது பவுனுக்கு 1600 உயர்ந்தது ஒரு கிராம் தங்கம் 200 உயர்ந்து 12770க்கு விற்கப்பட்டது. அதேபோல் வெள்ளி விளையும் கணிசமாக உயர்ந்து வருகிறது இதனை மக்கள் வாங்கி வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

வெள்ளி விலை கிராமுக்கு மூன்று ரூபாய் உயர்ந்து 234 ஆகவும் உயர்ந்து நிற்கிறது