பக்கத்து வீட்டுக்காரரிடம் ஏற்பட்ட சண்டை.! நடுநடுங்க வைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி

0
cctv
cctv

இந்தியாவில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் நகைக்கடை ஒன்றில் இருவர் திடீரென உள்ளே நுழைந்து அடித்து நொறுக்கி, துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேசத்தில் உள்ள முசாஃபர் நகரில் சிவில் லைன் பகுதியில் ஒருவர் நகைக்கடை வைத்துள்ளார், அந்த நகைக்கடை உரிமையாளருக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கும் சில நாட்களுக்கு முன்பு சமீபத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

பக்கத்து வீட்டுக்காரருக்கு இரண்டு மகன்கள், இந்த வாக்குவாதம் நடைபெற்ற சில நாட்கள் கழித்து பக்கத்து வீட்டுக்காரர்களின் இரண்டு மகன்களும் அந்த நகைக் கடைக்குள் புகுந்து, நகைக் கடை உரிமையாளர் மற்றும் அங்கு இருந்தவர்களையும் பலமாகத் தாக்கி உள்ளார்கள்.

மேலும் அந்த பக்கத்து வீட்டுக்காரர் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சுட்டுள்ளார்கள் இதனால் சம்பவ இடத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்தார்கள், மேலும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். பின்பு போலீசார் அந்த பக்கத்து வீட்டுக்காரர்களின் இரண்டு மகன்களையும் கைது செய்துள்ளார்கள்.