பொங்கலன்று “வலிமை” படத்துடன் மோத போவது பீஸ்ட் படம் இல்லை.? அதுக்கும் மேல பெரிய பட்ஜெட் படம் ஒன்றுடன் தானாம்.

0

தமிழ் சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நடிகர்ட் அஜித் இரண்டாவது முறையாக வினோத்துடன் கூட்டணி அமைத்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற 2022ஆம் ஆண்டு பொங்கலன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் வலிமை படத்தின் வசூலை பாதிக்க மற்ற நடிகர்களின் படங்கள் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது அதிலும் குறிப்பாக தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் படம் விறுவிறுப்பாக நடந்து வருவதால் இந்த திரைப்படம் நிச்சயம் வருகின்ற 2022ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகி.

இரண்டு ஹீரோக்களும் மிகப்பெரிய அளவில் மோதிக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வந்த தகவலின் படி பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதிக்குள் முடிந்துவிடும் அந்த காரணத்தினால் அடுத்த வருடம் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் விஜய்யும், அஜித்தும் மோதிக் கொள்ள மாட்டார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் சந்தோஷப்படவும் முடியாது. ஏனென்றால் தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ராஜமௌலி தற்பொழுது ஆர் ஆர் ஆர் படத்தை வருகின்ற பொங்கல் அன்று படத்தை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாக வலிமை படமும், ஆர் ஆர் ஆர் படமும் மிகப்பெரிய அளவில் சண்டை போட ரெடியாக இருப்பதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது. வலிமை படக்குழு இதற்கு தயாராக இருப்பதோடு உடனடியாக தியேட்டர்களை அதிகமாக பிடித்தால் மட்டுமே நல்ல வசூலை தட்டி தூக்கும் என கூறப்படுகிறது.