அனிருத் தான் உனக்கு சரியாக இருப்பாரு.. இயக்குனர் லோகேஷை அனுப்பி வைத்த கைதி பட பிரபலம்.!

லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்னும் படத்தை எடுத்திருந்தார் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக இருந்தது அதேசமயம் இந்த திரைப்படத்தில் பாடல் மற்றும் ஹீரோயின் காண காட்சிகள் எதுவும் இல்லாமல் இருந்தது.

இருப்பினும் படம் சூப்பர் ஹிட் அடித்தது ஒரு பக்கம் இந்த படத்தின் கதையை சிறப்பாக லோகேஷ் எடுத்திருந்தார் மறுபக்கம் கார்த்தி கொடுத்த கதாபாத்திரத்தில் சூப்பராக நடித்திருந்தார் இருப்பினும் இவர்களை எல்லாம் விட ஒரு படி மேலே போய் இந்த படத்தை வெற்றிக்கு அழைத்துச் சென்றவர் இசையமைப்பாளர் சாம்.

இந்த படத்தில் முழுக்க முழுக்க சண்டை காட்சிகள் மற்றும் தீம் மியூசிக் தான் இந்த படத்தை வேற லெவலுக்கு எடுத்துச் சென்றது மிக சூப்பராக பேக்ரவுண்ட் ஸ்கோர் தீம் மியூசிக் என ஒவ்வொன்றிலும் சூப்பராக அசத்தி இருந்தார் இசையமைப்பாளர் சாம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி விஜயை..

வைத்து மாஸ்டர் படத்தை இயக்க ரெடி ஆனார் இந்த படத்திற்கும் சாம் தான் இசையமைக்க வேண்டுமென கேட்டுள்ளார் ஆனால் சாம்மோ இந்த படத்திற்கு அனிருத் சூப்பராக பொருந்துவார் எனக் கூறினார். இதை சமீபத்திய நேர்காளர்கள் ஒன்றில் தெரிவித்தார். லோகேஷின் அடுத்தடுத்த படமான மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களுக்கு சாம் இசையமைக்க வில்லை.

ஆனால் லோகேஷ் அடுத்து இயக்க உள்ள புதிய படமான கைதி 2, தளபதி 67 ஆகிய படங்களுக்கு சாம் தான் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படங்களில் தீம் மியூசிக் மற்றும் பேக்ரவுண்ட் மியூசிக் போன்றவை மிரட்டும் வகையில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment