வயசானாலும் கொஞ்சம் கூட மாறாத ஸ்டைல் வைரலாகுது ரஜினியின் ஜெயிலர் பட “glimpse” வீடியோ – வெடி வெடித்து கொண்டாடும் ரசிகர்கள்..

0
jailer-
jailer-

தமிழ் சினிமா உலகில் நம்பர் ஒன் ஹீரோ என்ற அந்தஸ்தை தக்கவைத்து உள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் இப்பொழுதும் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ஓடுகிறார் அந்த வகையில் அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தனது 169 திரைப்படமான ஜெயிலர்.

படத்தில் ரஜினி விறுவிறுப்பாக நடித்த வருகிறார் இந்த படத்தை இளம் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்குகிறார் அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மிக பிரம்மாண்ட பொருள் அளவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. ஜெயிலர் திரைப்படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட படமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தில் வயதான கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதால்.. இந்த படத்தை பார்க்க தற்பொழுது மக்கள் மன்றம் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் ரஜினியுடன் கைகோர்த்து ஜெயிலர்  படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

படத்தின் படப்பிடிப்பது சுறுசுறுப்பாக எடுக்கப்பட்டு வந்தாலும் அவ்வப்பொழுது இந்த படத்தில் இருந்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் லீக்காக்கி கொண்டு வருகின்றன இது படக்குழுவுக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் பெரும் கோபத்தை கொடுத்து வந்தது. இப்படி இருக்கின்ற நிலையில்  ஜெயிலர் படக்குழு அதிகாரபூர்வமாக glimpse வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அந்த வீடியோவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செம்ம மாஸாக சீன்னாக இருக்கிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும், கமெண்ட்களையும் அள்ளி வீசி அசத்தி வருகின்றனர் இதோ ஜெயிலர் படத்தில் இருந்து வெளிவந்த அந்த glimpse வீடியோ..