மிரட்டலாக வெளிவந்த யானை படத்தின் Glimpse வீடியோ – ஆக்ஷனில் புகுந்து விளையாடும் அருண் விஜய்.!

arun-vijay
arun-vijay

நடிகர் அருண்விஜய் அண்மை காலமாக தொடர்ந்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருகிறார் அந்த படங்கள் அவருக்கு வெற்றியை கொடுக்கின்றன இப்பொழுது கூட அருண்விஜய் யானை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்

அதனை தொடர்ந்து அருண் விஜய் கையில் சினம், பாக்சர், அக்னி சிறகுகள், பார்டர் போன்ற பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன முதலாவதாக யானை திரைப்படம் தான் வெளிவர இருக்கிறது இந்தப்படம் அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ளது இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்கிறார்

மேலும் யோகி பாபு, அம்மு அபிராமி, குக் வித் கோமாளி புகழ், பிரகாஷ்ராஜ், கேஜிஎஃப் புகழ் கருடா ராம் ஆகியோர்கள் நடித்து உள்ளனர்.இந்த படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து இழுத்த நிலையில்  தற்பொழுது யானை படத்தின் glimpse வீடியோ வெளிவந்து ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது.

இந்த வீடியோ முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் பஞ்ச் டயலாக் ஆகியவை வெறித்தனமாக இருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது படம் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி திரையரங்கில் வெளிவர இருக்கிறது.

இந்த படத்தின் மூலம் இயக்குனர் ஹரி மற்றும் அருண் விஜய் ஆகியோர் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடிப்பார்கள் என கூறப்படுகிறது. இதோ ரசிகர்களை கவர்ந்து இழுத்த யானை படத்தின் gilmpse வீடியோ.