தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி ஆனால் நான் விருது வாங்க படங்களை இயக்கவில்லை.! என்னுடைய படம் இதை செய்தால் மட்டும் போதும்.

திரை உலகை பொறுத்தவரை ஒரு நடிகர் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுக்க முயற்சிப்பது உண்டு ஆனால் அத்தகைய கூட்டணி அமைவது கடினம்.

அப்படி அமைந்துவிட்டால் தொடர் படங்களை கொடுத்து தனக்கான இடத்தை சினிமா உலகில் நிரந்தரமாக பிடித்துவிட முடியும்.

அப்படித்தான் தமிழ் சினிமாவில் வெற்றிமாறன்,தனுஷ் கூட்டணி எப்போதும் ஹிட் படங்களை கொடுப்பதோடு மக்களுக்கு சமூக அக்கரை உள்ள கருத்துக்களையும் கொடுக்கிறது மேலும் அத்தகைய திரைப்படமும் வசூல் வேட்டை நடத்துகிறது.

இந்த கூட்டணி தேசிய விருது அள்ளுகிற. அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் “அசுரன்” என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு வசூலையும் வாரி குவித்தது இந்த நிலையில் இத்திரைப்படம் சமீபத்தில் தேசிய விருதையும் கைப்பற்றியது.

இந்த திரைப்படத்தில் தனுஷின் நடிப்பு அபாரமாக இருந்ததால் அவரும் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றார். இது குறித்து பேசிய வெற்றிமாறன் நான் இயக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் மக்களிடையே கருத்தைக் கூறுவது போல இருக்க வேண்டுமென்பதுதான் படத்தை இயக்குவேன் ஆனால் அந்த திரைப்படம் பல விருதுகளை தட்டி பரிகின்றன.

எனக்கு அடுத்தடுத்த படங்களை இயக்க இது உத்வேத்தாமாக இருக்கிறதே தவிர வேறு எதுவும் இல்லை என குறிப்பிட்டார். “என்னுடைய படத்தின் கருத்துக்கள் நாலு பேத்துக்கு சென்று அடைந்தால்போதும்” .

மேலும் நான் வாங்குகின்ற ஒவ்வொரு விருதுகளையும் பாலுமகேந்திரா அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் அதே போலத்தான் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.

அசுரன் திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் மற்றும தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறினார்.

Leave a Comment