தோனிக்கு பிறகு இந்த இளம் வீரருக்கு கேப்டன் பொறுப்பை கொடுங்கள் – சேவாக் கருத்து.! ஜடேஜா வேண்டாம்.?

0
dhoni
dhoni

சென்னை அணி கடந்த ஐபிஎல் சீசனில் பிளே-ஆப் சுற்றுக்கு போக முடியாமல் வெளியேறி உள்ளது இதற்கு முக்கிய காரணம் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டது என கூறப்படுகிறது அனுபவம் இருந்தாலும் கேப்டன்ஷிப்பில் அவருக்கு புதிது என்பதால் எந்த இடத்தில் பில்டர் நிற்க வைக்க வேண்டும்.

எந்த நேரத்தில் பந்துவீச்சாளர்களை சரியான நேரத்தில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அவருக்கு புதிதாக இருப்பதால்  சரியாக வழி நடத்த முடியாமல் போனது 8 போட்டிகளில் பெரிதும் தோல்வியையே தழுவியது இதை ஒரு கட்டத்தில் உணர்ந்துகொண்ட ஜடேஜா கேப்டன்ஷிப்பில் இருந்து விலகுகிறேன் என கூறினார் இதனையடுத்து மீண்டும் கேப்டன் ஆக்கப்பட்டார் தோனி.

தோனி பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் அடுத்ததாக சென்னை அணியின் கேப்டனாக யாரை போட்டால் சிறப்பாக இருக்கும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக்  கூறியுள்ளார்.

சிஎஸ்கே அணியில் கடந்த சில வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தொடக்க ஆட்டக்காரர் விளையாடி வருவர் ருத்துராஜ். இவர் 100 அடித்தாலும் சரி 1 அடித்தாலும் சரி எப்பொழுதும் அலட்டிக்கொள்ளாமல் இருக்கிறார். அவருக்கும் அனுபவம் இருக்கிறது ஜார்க்கண்ட் அணியின் கேப்டனாக தற்போது இருந்து வருகிறார்.

csk
csk

நிச்சயம் அவர் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்தால் நல்லது ஒரு இடத்திற்கு எடுத்துச் செல்வார் அதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சேவாக் கூறினார். எப்படி இருந்தாலும் தோனிக்கு பிறகு ஒரு வீரரை கேப்டன் பதவியில் நியமித்து தான் ஆக வேண்டும் அதற்கான வேலைகளில் சிஎஸ்கே நிர்வாகமும் ஈடுபட்டு தான் வருகிறதாம்.