தெலுங்கு சினிமாவில் நடித்து பின் தமிழ் சினிமா உலகிற்கு அடியெடுத்து வைத்தவர் நடிகை அனுஷ்கா. தமிழ் சினிமா எப்படிப்பட்டது என்பதை நன்கு உணர்ந்து கொண்டு பின் அதற்கு ஏற்றவாறு தனது நடிப்பையும் மற்றும் உடல் அழகையும் காட்டி ரசிகர்களையும், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரையும் வெகுவாக கவர்ந்து இழுத்தார்.
இதனாலேயே அவருக்கு எடுத்தவுடனேயே சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார் மேலும் டாப் நடிகர்களுடனும் உடனே ஜோடி போட்டு நடித்தார். அந்த வகையில் அஜித், விஜய், சூர்யா போன்ற டாப் ஜாம்பவான்களுடன் கைகோர்த்து நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவர் சோலோ படங்களிலும் தனது திறமையைக் காட்ட ஆரம்பித்தார்.
ஆரம்பத்தில் வெற்றியை கொடுத்தாலும் போகப்போக அது அவருக்கு தோல்வியை தர ஆரம்பித்தது இதனால் தன்னை முற்றிலும் மாற்றி கொண்டு வேறு விதமான கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இஞ்சி இடுப்பழகி படத்திற்காக இதுவரை இல்லாத அளவிற்கு உடல் எடையை தாறுமாறாக ஏற்றிய அந்த படத்தில் நடித்தார்.
அதன் பிறகு இவருக்கு உடல் எடையை குறையவும் இல்லை ஆனால் ஒரு சில இயக்குனர்கள் இவர் நடித்தால் நம் படத்திற்கு நல்ல ரீச் கிடைக்கும் என எண்ணி அவரை களமிறங்கினார். அந்த வகையில் பாகுபலி படத்தில் இவரை கமிட் செய்தார் இயக்குனர் ராஜமவுலி அப்பொழுதும் இவர்கள் உடல் எடையை குறைக்க முடியாததால் அனிமேஷன் போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒல்லியாக காண்பித்தனர்.
அதன் புகைப்படங்கள் கூட சமீபத்தில் வைரலானது. ஒருவழியாக தற்போது கொஞ்சம் கொஞ்சமாக உடல் எடையை குறைத்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நிசப்தம் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அனுஷ்கா வாழ்ந்து வரும் வீட்டின் பிரமாண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் கசிந்துள்ளன மேலும் அவர் யார் யாருடன் இருக்கிறார் பாருங்கள்.

